பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

சு. சமுத்திரம் ☐

போய்விட்டது. ஆனாலும், அந்தக் குடும்பத்தினர் இப்போதுகூட என்னிடம் சரியாகப் பேசுவதில்லை. என்றாலும், என்னையும், என் குடும்பத்தையும் தாக்கி நான் பல கதைகள் எழுதியிருப்பதை அறிந்து அவர்களின் துவேசம் ஆவேசமாக மாறி இப்பொழுது அதுவும் குறைந்து விட்டது.

குறிப்பு: இப்போது, கிராமத்துக் கோயில்களில் பன்றிகளைப் பலியிடுவது நின்றுவிட்டது. வில்லுப்பாட்டும், கணியன் கூத்தும் போய் வீடியோ புகுந்துவிட்டது. சாமியாடிகள் இடைவேளையில் மட்டுமே ஆடுவதற்கு அனுமதிக்கப் படுகிறார்கள்.