பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

31

காரணம் என்று நினைக்கிறேன். இந்தச் சமயத்தில், குமுதத்தில் சுஜாதா எழுதிய ஒரு தொடர்கதை சாதிப் பிரச்சினையை கிளப்பிவிட்டது. ‘கள்ளச் சாணாள் ஒத்திப்போ’ என்பன போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் வெளியாகின. குமுதம் அலுவலகத்திற்கு அருகே ஒரு கல்யாண வீட்டில், இந்தத் தொடர்கதை, நாடார் குலத்தைக் கேவலப்படுத்துவதாகக் கூறப்பட்டு, அங்கிருந்த நாடார்கள் அனைவரும் குமுதம் அலுவலகம் சென்று வாக்குவாதம் செய்திருக்கிறார்கள்; குமுதம், நிர்வாகத்தினரை கோபத்தில் ஏதேதோ திட்டியிருக்கிறார்கள். உடனே ஒருவர்: ‘நமது குலத்திலேயே ஒரு கருங்காலி - சமுத்திரம் என்பவன் நாடார் சாதியை கேவலமாக எழுதியிருக்கிறான்’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட, அங்கிருந்தவர்கள் என் வீட்டை நோக்கிப் படையெடுக்கத் தீர்மானித்தார்களாம். என் வீடு அங்கிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், மேலும், அந்தக் கூட்டத்தில் இருந்த என் நண்பர்கள் தாக்குதலுக்குப் புறப்பட்டவர்களைத் தடுத்து விட்டதாகவும் கேள்விப்பட்டேன். இதற்குக் கூட, நான் அதிகமாக வருத்தப்படவில்லை. ‘ஓங்கிய பனைமரங்களிலே வீரமாக ஏறிய பாட்டாளி பரம்பரை நாங்கள்’ என்று பெருமிதப்பட வேண்டிய என் சாதியினர், ‘நாங்கள் ஆண்ட பரம்பரையாக்கும்’ என்று பல இடங்களில் ஊர்வலமாகப் போனதுதான் எனக்கு வேதனையாக இருந்தது.

இந்தப் பின்னணியில் எழுத்தாளர் சுஜாதாவை ஒரு தடவை சென்னை வானொலி நிலையத்தில் சந்தித்தேன். அதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு