பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

33

அழைத்தன. ஒரு எழுத்தாளன், சாதிகளுக்கு அப்பால்பட்டவன். எந்த சாதிக் கூட்டத்திலும் கலந்து கொள்ளக் கூடாது என்ற கருத்துள்ளவன் நான். ஒரு சமயம் திரு நா.பார்த்தசாரதி தினமணிக் கதிரில், சாதி மலர்களை போட்ட போது - நாடார் மலர் வந்த போது என்னிடம் புகைப்படம் கேட்டார். நான் என்னை எந்த சாதிக்குள்ளும் அடைத்துக் கொள்ள விரும்பவில்லை என்றேன். அப்படியும், அவர் என் புகைப்படத்தை வெளியிட்டார்.

குறிப்பு

1. ஒரு கோட்டுக்கு வெளியே நாவல் அகில இந்திய வானொலியில் 14 மொழிகளில் ஒலிப்பரப்பாயிற்று. நேஷனல் புக் டிரஸ்ட் இதை 14 மொழிகளில் வெளியிட ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக, சென்னை வானொலி நிலைய வர்த்தக ஒலிபரப்பு இயக்குநர் திருமதி விஜயலட்சுமி சுந்தரராஜன் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு, இந்தியில் வெளியாகி உள்ளது. சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2. எழுத்தாளர் ஜானகிராமன் அவர்களை நான் டெல்லியில் சந்தித்தபோது இதன் நாடக வடிவத்தை மனமாறப் பாராட்டினார்.