பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


5
கிராமிய அனுபவங்கள்


வளத்தம்மா

அம்மா இறந்த பிறகு, என் அம்மாவின் அம்மாவான வளத்தம்மாவிடம் வளர்ந்தேன். என் வளத்தம்மாவை ‘பாப்பாத்தி’ என்பார்கள். அந்த அளவிற்கு சிவப்பு, ஊரில் பிள்ளைகள் “தாயை வாளா, போளா” என்பார்கள். என் வளத்தம்மா, தன் பிள்ளைகள் தன்னை நீங்க நாங்க என்று பேசும்படி செய்தவர். வயல்வரப்பிற்குப்போகாதவள். ஏழையாக இருந்தாலும், பண்ணையார்த் தனத்தில் இருந்தவள். எஸ்.எஸ். எல்.சி. படிக்கும் வரை வளத்தம்மாவுடன், படுப்பேன். வளத்தம்மாவைப் பார்க்காமல், என்னால் இருக்க முடியாது. பிறகு, சென்னைக்கு படிக்க வந்ததும், தூங்கி எழுந்திருக்கும் போதெல்லாம், ‘வளத்தம்மா, வளத்தம்மா’ என்று சொல்லிக் கொண்டே எழுந்திருப்பேன். ஆனால் காலப்போக்கில், வளத்தம்மாவை