பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

73

அரசின் விதிமுறைகள் தெரிந்த ஓய்வு பெற்ற ஒரு அண்டர் செக்கரட்டரி துணை. அவரிடமிருந்து ஒரு நாளைக்கு ஒரு கடிதம் வீதம் வரும். அத்தனையும் சட்டதிட்டங்களைக் கொண்டதாக இருக்கம். நான் அந்த ஆசாமியை டாக்டரிடம் போகச் சொன்னதே தவறு என்று ஒரு செக்ஷனைச் சுட்டிக்காட்டி ஒரு கடிதம் வந்தது. அந்த குறிப்பிட்ட செக்ஷனைப் படித்தால், நான்காவது பிரிவு அலுவலரை மருத்துவ சான்றிதழிக்காக டாக்டரிடம் அனுப்பக் கூடாது என்றும் ஒரு விதி இருக்கிறது. இது எனக்குத் தெரியாதது நியாயமே. ஏனென்றால் நான் அடிப்படையில் ஒரு பப்ளிசிட்டி ஆபிசர். ஆனால் என் நிர்வாக அதிகாரிக்கும் தெரியாமல் போனதுதான் அநியாயம்.

நிர்வாக அதிகாரியையும் இழுத்துக் கொண்டு ஒவ்வொரு அலுவலகமாக சட்டவிதிகளைத் தெரிந்து கொள்ள லோ... லோ... என்று அலைந்தேன். ஒருவரை சஸ்பெண்டு செய்து விட்டால், அவருக்கு சார்ஜ் ஷீட் கொடுக்க வேண்டும். இதற்கு அவர்கள் பதில் அளித்ததும், அதில் திருப்தி ஏற்படவில்லை என்றால் விசாரணை நடத்தலாம். விசாரணை அதிகாரியை நியமித்த பிறகு, அந்த ‘விசா’ அதிகாரியே எகிறுவார். அவரை நீக்க அதிகாரம் கிடையாது. ஆனால், அந்த விசாரணை அதிகாரி வேண்டாம் என்று சஸ்பென்டு செய்தவர் சொல்லலாம். அவர் சார்பில் டிபென்ஸ் அஸிஸ்டென்ட் என்று ஒருவரை வைத்துக் கொள்ளலாம். அவர் அலுவலகப் பழைய குப்பைகளை கிளறலாம். மேல் அதிகாரி மீது என்னென்ன பழிகளையெல்லாம் போட முடியுமோ, அவற்றையெல்லாம் போடலாம். என்