பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

79

அல்லது இல்லை என்று ஒரே வார்த்தையில்தான் பதில் சொல்ல வேண்டுமே தவிர அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசக்கூடாது, என்று பவ்வியமாச் சொல்லிவிட்டு பண்டாரம் கிண்டலாகச் சிரிப்பான். திகைத்துப்போன டைரக்டரிடம் “கவலைப்படாதீங்க சார்... நிர்வாகக் காரணங்கள், பொதுமக்கள் நலன், ஆகிய இரண்டு வார்த்தைகள் இருக்கும் வரை “மாண்புமிகு” உறுப்பினர்களோ, மேதகு பார்லிமென்டோ நம்மை எதுவும் செய்ய முடியாது” என்று குறுஞ்சிரிப்பாய் சிரித்துச் சொல்வான். இது கல்கியில் பிரசுரமாயிற்று.

இந்தப் பண்டாரத்தோடு பண்டாரமாக, இன்னும் சில கதைகளை எழுதி, பண்டாரம் படுத்தும் பாடு என்று, ஒரு சிறுகதைத் தொகுப்பை வெளியிடலாம் என்று நினைக்கிறேன். இந்த மாதிரி வி.கே.என். என்ற மலையாள ஆசிரியர், பையன் என்ற ஒரு பாத்திரத்தை பல சிறுகதைகளிலும், நாவல்களிலும், உலவ விட்டிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த வி.கே. என். சிறிது காலம் புதுதில்லி வானொலி நிலையத்தில் மலையாள செய்திப்பிரிவில் பணியாற்றியவர். அப்போது தமிழ் செய்திப் பிரிவில் அவருடன் ஒரே அறையில் பணியாற்றிவன் நான். மலையாளிகள் ஒற்றுமையாகவும், தமிழர்கள் சண்டை போட்டுக் கொள்வதும் எங்கேயும் நடப்பது போல அங்கேயும் நடந்தது. இதை வைத்து அவர் “அசுரவாணி” என்ற ஒரு நாவலை எழுதியதாகக் கேள்விப்பட்டேன்.

அலிய சந்தானம்

கர்நாடக மாநிலத்தில் இன்னொரு கொடுமை