பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

97

வில்லை. நாங்கள் பதறிப்போய், துடித்ததைப் பார்த்து, மெல்ல புன்முறுவல் செய்தார். “ஏசுவே ஏசுவே” என்பதைத் தவிர எந்த வார்த்தையும், அவரிடமிருந்து வரவில்லை. அரசாங்க மருத்துவமனையில் சேர்த்தால் வம்பு என்று அவரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் போனோம். அங்கே இருந்த டாக்டர்கள் பயந்துவிட்டார்கள். ஆனாலும் அங்கிருந்த வார்டு பாய்க்கு கையில் பத்து ரூபாயை “காப்புக்கட்டி” அந்த அம்மாவை, எப்படியோ சேர்த்து விட்டோம். கால் முறிவுக் கட்டுப்போடப்பட்டது. இதற்குள் அந்த அம்மாவின் பையன்களும், பெண்களும் தகவல் தெரிவிக்கப்பட்டு, வந்தார்கள். குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டார்கள். அவர்களில் ஒருவர் கூட எங்களைத் திட்டவில்லை. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் நன்றாக அடி கிடைப்பதும் உண்டு. ஆனால் இந்த அம்மாவின் பிள்ளைகளோ எங்களை அதிர்ந்து கூட ஒரு வார்த்தை பேசவில்லை. அந்த அம்மாள், பிள்ளைகளுக்கு ஆறுதல் கொடுத்தபடியே எங்களை ஆசீர்வாதம் செய்வது போல் பார்த்தார். நான் நெக்குருகிப் போனேன். இந்த மாதிரி அற்புதத் தாயைப் பார்த்ததில்லை. அவருக்கு எங்களால் இயன்ற உதவிகள் அனைத்தையும் செய்து, விவகாரத்தை முடித்து விட்டோம். இப்படி அநியாயமாக அடிபட்ட போதிலும், ஒரு வார்த்தை கூட திட்டாத அந்த அம்மாவை வைத்து ‘பெங்களூர் தெரேஸா’ என்ற சிறுகதையை எழுதினேன். குமுதத்தில் பிரசுரமாயிற்று. என்றாலும் அந்தக் கதையில் டிரைவர் முக்கியத்துவம் பெற்று, அந்த அம்மாள் அதிக முக்கியத்துவம் பெறவில்லை என்பது ஒரு விமர்சனம். குமுதம் இந்தக் கதையை