பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

நிலமைகளை உங்களுக்கு எடுத்துச் சொன்னேன். அந்த நிலைமைகள் மாற்றப்பட்டாலொழிய இலக்கியம் வளராது! மாற்றப் படவில்லையென்றால் கல்லூரிகளால் இலக்கிய வளர்ச்சி ஏற்படாது!

இப்பொழுதுள்ள துரைத்தனத்தார் வியாபாரத் துறைக்கு பெயரிடுவதுபோல், பள்ளிகளுக்கு 'பல விஷயங்களைச் சொல்லிக்கொடுக்கும் இடம்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் பள்ளிகளுக்கு, கல்விக் கூடம், அறிவாலயம் என்றெல்லாம் ஆழகாக பெயர் வைத்திருந்தார்கள். அதை இப்போது இப்படி மாற்றியிருக்கிறார்கள். ஆகையால்தான் எதிர்காலத்தில் இலக்கியம் வளருமா என்ற ஐயப்பாடு இருப்பதாக முன்பு சொன்னேன்! ஆகவே நீதிபதியின் முன் இவைகளைச் சொன்னேன். அவர் தீர்ப்புச் சொல்லுவார் என்றும் கருதுகிறேன்.

இலக்கியம் யாருக்காக அமைக்கப்பட்டது. அதனால் என்ன பலன்? இலக்கியத்தால் எத்தகைய பலனை பெற வேண்டும்? அன்றிருந்த தமிழறிஞர்கள் பொதுவாழ்க்கையிலே நாட்டம் கொள்ளாமல் தனி வாழ்க்கையிலே அதிகமாக இருந்திருக்கிறார்கள். இன்று சமுதாயத்தில் தனி வாழ்க்கையை விரும்பவில்லை, கூட்டு வாழ்க்கையையே விரும்புகிறார்கள்.

அன்று தனித்து வாழ்ந்து, அறிவுத் திறனால், காலத்தினால் அழிக்க முடியாத பேரிலக்கியங்களை ஆக்கித் தந்தார்கள்.

டாக்டர் சிதம்பரனாத செட்டியார் அவர்கள் பேசுகையில் கூட்டு வாழ்க்கையின் தன்மையினைப்பற்றி எடுத்துரைத்தார்கள்.

கணவனாலே கைவிடப்பட்ட காரிகையைப் பற்றி சிந்தனை செய்து எழுத்தாளனாலே எழுதமுடியும். அந்தக் காலத்தில் சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகியைப்