பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

இன்று படித்தால் மட்டும் போதும் என்கிறார்களே தவிர, கல்லூரி படிப்பு தேவை என்பது அல்ல! இன்றைய படிப்பு படிக்கின்றவர்கள் வியாபாரக் கண்ணோடு படிக்கின்றனர். வீட்டிலே உள்ள பெரியவர்கள். ஏன் வியாபார நோக்கத்தோடு படிக்கிறாய் என்று கேட்டால், நீயும் மாணவனாய் இருந்தபோது வியாபார நோக்கத்தோடு படித்தாய் என்று கேட்கும் அளவிலே இருக்கிறார்கள்.

அன்று இலக்கியம் படித்தவர்கள், குடும்பத்திலே வசதியோடு இருந்தவர்கள் தான் இலக்கிய படிப்பு படித்தார்கள்! படித்து பட்டம் பெற்று, இன்னொரு கல்லூரியில் போய் விரிவுரையாளராக பணியாற்றுவார்கள். பொருளாதார படிப்பு முடித்து பட்டம் பெற்றால் ஒரு 500 ரூபாய் சம்பளத்தில் வேலை காத்திருக்கும் என்று அன்று நினைத்தார்கள்.

இப்போது கல்லூரி படிப்பு என்பது காலக்கேடு. நேரக்கேடு என்றும் கருதுகிறார்கள்! பத்தாவது வரை படித்தால் போதும், அவரவர்கள் விரும்பும் தொழிலில் டுபட்டுவிடுகின்றனர்.

மின்சார தொழிலிலே விருப்பம் உள்ளவர்கள் மின்சார தொழிலுக்கும், பஞ்சாலைக்கு செல்ல விரும்புபவர்கள் பஞ்சாலைக்கும், ஆள் பலம் இருப்பவர்கள் மருத்துவ துறைக்கும் சென்றுவிடுகிறார்கள்.

படிக்கிறபோதே மாணவர்கள் தொகை பிரிந்து விடுகிறது! மிச்சம் உள்ள மாணவர்களில் எத்தனை மாணவர்கள் இலக்கியம் படிக்கப்போகிறார்கள்? 1970-ம் ஆண்டில் எத்தனை மாணவர்கள் இலக்கிய வகுப்பு படிக்கப் போகிறார்கள்?

இப்போதுள்ள கல்வி முறையைக் காணுகின்ற போது, கல்லூரிகளினால் இலக்கியம் வளராது என்பது தெளிவாகிவிட்டது! முன்பு கல்லூரிகளில் இருந்த