பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

என்னென்ன காரியங்களுக்கு பயன்பட்டிருக்கிறது என்பதுதான் அதில் முக்கியமானதாகும்.

அதை கவனிப்பதற்கு முன்னால், இலக்கிய வளர்ச்சிக்கு ஏற்ற கல்விமுறை இப்போது இருக்கிறதா என்பது ஐயப்பாட்டுக்குரியதாகும். இப்போது இருக்கிற கல்வி முறையால் இலக்கியம் வளர்ச்சி அடையுமா?

இப்போதெல்லாம் கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன என்ற செய்தியை பத்திரிகை படிப்பவர்கள் அறிந்திருப்பார்கள் என்று கருதுகிறேன். அதற்கு காரணத்தை அவர்கள் கூறுகின்ற நேரத்தில்— மாணவர்கள் குறைவாக வருகிறார்கள் என்று கூறுகிறார்கள்.

மாணவர்கள் தொழில் பள்ளிக்கூடங்களுக்கு சென்று விடுகிறார்களென்றும் கூறுகிறார்கள். இந்த நிலைமை இப்படியே நீடிக்குமானால் இலக்கியத்தை கல்லூரிகள் பரப்ப முடியாது; மணவழகர் மன்றத்தைப் போன்றவர்களால் தான் இலக்கிய வளர்ச்சி பெறமுடியும்.

நான் கல்லூரியிலே படித்துக் கொண்டிருந்தபோது எந்த படிப்பு படிப்பது என்று யோசித்து கொண்டிருந்த போது நண்பர்களும், ஆசிரியர்களும் இலக்கிய படிப்பு படித்தால் வேலை கிடைக்காது, பொருளாதார படிப்பு படித்தால்தான் வேலை கிடைக்கும் என்று வற்புறுத்தினார்கள்.

வரலாற்றுப் படிப்பு படித்தால் வேலை கிடைக்காது என்று மாணவர்கள் பொருளாதார படிப்பு வகுப்பிற்கு சென்றுவிடுவார்கள். வேதாந்த படிப்பு வகுப்பாசிரியர் எப்படியாவது இரண்டு மூன்று மாணவர்களை இழுத்துப் பிடித்து வகுப்பு நடத்துவார். பொருளாதார படிப்பு வகுப்பிற்கு நூறு மாணவர்கள் தேவை என்றால் மற்ற மாணவர்களை ஒதுக்கித் தள்ளினார்கள்.