பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

பலர், தமிழ்ப் பாடல்கள் பாடுவதே அவமானமெனக் கருதி யிருந்தனர். பொருள் விளங்காத பாடல்களையே பாடி வந்தனர்.

ஆனால், பல ஆண்டுகளாகப் பல தமிழன்பர்கள் இசைத்தமிழ், வளர்ச்சி யடையவேண்டுமெனக் கூறி வந்தனர். ஒழ்வொரு சங்கீத மகா நாடுகளிலும் இதைப்பற்றிப் பேசப்பட்டது. இம்முயற்சி காரணமாக இசைவாணர்கள் பலரும், சபைகளில் தமிழ்ப் பாடல்கள் பாடவும் தொடங்கினர். அப்பாடல்களை இசைக் காதலர்கள் சுவைக்கவும் தொடங்கினர். தமிழ்ப் பாடல்களைத் தமிழ் மக்கள் சுவைக்கின்றனர். என்பதை அறிந்தவுடன், இசைவாணர்களுக்கும் தமிழ்ச் 'சாகித்யம்' பாடுவதில் ஊக்கம் வளர்ந்து வந்தது.

அண்ணாமலை நகரில் பல்கலைக் கழகத்தில், இசை வாணர்களின் கூட்டத்தில் தமிழன்பர்களின் ஒத்துழைப்பின் பேரில், செய்யப்பட்ட முடிவு இசைவாணர்களுக்கு ஊக்கமளிக்கும்; இசைக் காதலர்களுக்கும் மகிழ்ச்சி யளிக்கும்! இதில் ஐயமில்லை!

ஆனால் ஒரு சிலர், அண்ணாமலை நகரில் செய்யப்பட்டிருக்கும் அருமையான முடிவைக் குறைகூறத் தொடங்கி யிருக்கின்றனர். அவர்கள், தமிழிலேயே இசைபாடுவது என்று தொடங்கினால் கர்நாடக சங்கீதம் அழிந்துபோய் விடும். தியாகராஜ கீர்த்தனங்கள் மறைந்து போய்விடும்; தமிழில் கர்நாடக சங்கீதத்தை அமைக்க முடியாது; என்னும் வாதத்துக்கு, நம் மாகாணப் பத்திரிகையாகிய 'இந்து‘ வும் ஆதரவளித்து வருகிறது.

கர்நாடக சங்கீதம் ஒருநாளும் அழியாது. கர்நாடக் சங்கீதத்தை அமைத்துப் பாடக்கூடிய பாடல்கள் தமிழில் ஏராளமாக இயற்றிக்கொள்ளலாம். இதற்குச் செட்டி நாட்டு அரசரின் நன்கொடை பேருதவி செய்யும். தமிழ் நாட்டில் பண்டுதொட்டு நிலவி வரும் சங்கீதம் கர்நாடக