பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

நிறைவேற்றியதன்று; பல வகுப்பினரும், பல கொள்கையினரும் கூடிச் செய்த முடிவுதான் அது. பார்ப்பனர், பார்ப்பன ரல்லாதார் அனைவரும் அம் மகாநாட்டிற் கலந்து கொண்டனர். அம் மகாநாட்டின் முடிவைப்பற்றிக் குறை கூறி, வீண் வகுப்பு வேற்றுமையையும், மொழி வேற்றுமையையும் கிளப்பி விடுவதற்குக் காரணம், நமக்கு விளங்கவில்லை. "இந்து" பத்திரிகை கூட, இந்த வீண் கிளர்ச்சிக்கு ஆதரவளிப்பதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இம்மாதிரியே தமிழ்க் கலை வளர்ச்சிக்காகச் செய்யப்படும் எல்லா முயற்சிக்கும், ஒரு கூட்டம் தடை செய்து கொண்டிருந்தால், இறுதியில் தமிழர் நிலை எப்படி முடியும்? தமிழ்க் கலை வளர்ச்சிக்கு உதவி செய்யவேண்டியதே தமிழன்பர்கள் கடமை; தமிழ் நாட்டில் உள்ளவர்கள் கடமை.

தமிழ் நாட்டைப்போல் வேறு எந்த நாட்டிலும், அந்த நாட்டின் மொழியல்லாத வேறு மொழியிற் சங்கீதம் பாடுவதைக் கேட்க முடியாது. ஒவ்வொரு நாட்டினரும், தங்கள் தங்கள் தாய் மொழியிலேயே எல்லாக் கலைகளையும் புதிதாக ஆக்கி வருகின்றனர். தமிழரைப் போலத் தாய் மொழிக் கலை உணர்ச்சியற்றவர்களை எந்த நாட்டிலும் காணமுடியாது.

இப்பொழுதுதான் தமிழ்க் கலையுணர்ச்சி, தமிழரிடம் புகுந்திருக்கிறது. பல வழிகளில் தமிழ்க் கலைகளை வளர்க்க முயன்று வருகின்றனர். இம் முயற்சியில் இசைக் கலை தமிழுக்குப் புதிதன்று. தமிழோடு பிறந்தது; தமிழோடு வளர்ந்தது. இன்றும் தமிழோடு இணைபிரியாமல் இயைந்து கிடக்கின்றது. இவ்வுண்மையை இசைவாணர் மறந்தனர். ஆதலால் இடைக்காலத்தில் மழுங்கிவிட்டது. அதை விளக்கவே அண்ணாமலைப் பல்கலைக் கழகம் முனைந்திருக்கிறது. தமிழ் நாட்டில் கலை வளர்ச்சித் துறையிலும், வீண் பகையையும்