பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

—ஆரியர்களின் பழைய பல்லவி. இது இனி பலிக்காது.

சேரனுடைய கொலு மண்டபத்திலே, கொண்டாட்டங்களின்போது. இசைவாணர்கள், "வாதாபிகண" பாடவில்லை.

சோழன் களிக்க "சுனோ சுனோ" பாடவில்லை? பாண்டியன் பரிபாலத்தின்போது, "பலுகவே ஏமீனா" என்று பாடவில்லை.

மூவரசர்கள் வாழ்ந்த நாட்களிலும் அதற்கு முன்பும், தியாகய்யர் சாஸ்திரி, தீட்சிதர் கிருதிகள் பாடவில்லை, இசையே இல்லையா? உண்டு! தமிழ் இசை பாடப்பட்டது. அந்த இசை, இன்று எங்கே?

பொன்னும் மணியும் பொலிவுடன் விளங்க, வீரமும் ஈரமுங்கொண்டு ஆண்ட தமிழ் மன்னர்கள், மற்றைச் செல்வங்ளை வளர்த்ததுபோல், கலைச் செல்வத்தையும் வளர்த்தே வந்தனர். தமிழகத்துச் சந்தனம். ரோம் சாம்ராஜ்யத்தில் வாடை வீசியது போலத், தமிழ் கலையின் மணம், எங்கும் பரவி இன்பம் ஊட்டிற்று. எங்கே அந்தக் கலை இன்று?

சேர நாட்டின் மங்கையர், வேழத்தை விரட்டிய தமது வீரக் காதலரை வாழ்த்திப் பாடியது தமிழில் தான். வெற்றிக் கொடி பறக்க, எதிரியை விரட்டி அடித்துத் திரும்பிய சோழ மன்னர்கள் சிறப்பைத், தமிழில் தான் பாடினார்கள்.

பாண்டியனின் குமரிகளுக்குப், பாங்கிகள் பாடியது. தமிழ்ப் பாட்டுக்கள்தான். எங்கே அந்தத் தமிழ்ப் பாட்டுக்கள்?

கதிரவன் காய்வதை அடக்கிக்கொண்டு, மேனி சிவந்து மறையும் நேரத்தில், கடலோரத்தில், பட்டுக்