பக்கம்:எனது நண்பர்கள்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


நல்ல தமிழன்
பேச்சுடன் கண்டேன்

ம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள். ஊர் திருச்சி. இடம் நகர சபை நாடகக் கொட்டகை. நீதிக் கட்சி மாநாடு ஒன்று பெரிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அம்மகாநாட்டிற்கு வந்திருந்த கட்சித் தலைவர்கள் தங்களின், “ஆங்கிலப் பேச்சுக்களை மொழி பெயர்த்துக் கூறச்செய்யுங்கள்” எனக் கேட்டுக்கொண்டனர். முன்னேற்பாடு இல்லாத இத்திடீர்த் திட்டத்தையும் நடத்திவிட முயன்றேன். ஆங்கிலம் தெரிந்த அனைவரையும் அணுகினேன். மறுத்து விட்டனர். வழக்கறிஞர் ஒருவரை நெருங்கினேன். மன்னிக்கும்படி வேணடினார். விட்டு விலகினேன். இவ்வளவு பெரிய கூட்டத்தில் மொழி ஆற்றல் உள்ள தமிழன் ஒருவனும் இல்லையே என வருந்தினேன். வருந்தியது அதிகமா? வெட்கப்பட்டது அதிகமா? தெரியவில்லை.

இந்த நிலையில் ஒருவர் என் அருகில் வந்து, “மொழி பெயர்க்க ஆள்வேண்டுமா?” என்றார். “வேண்டும், யார் அது?” என்றேன். “கல்லூரி மாணவர் ஒருவர் வந்திருக்கிறார்; மொழி பெயர்ப்பார்” என்றார். எனக்கு இன்னும் சிறிது அதிகமாகக் கோபம் வந்தது. பெரிய தலைவர்களின் அரசியல் பேச்சுக்களை பள்ளிக்கடத்துப் பிள்ளைகளைக் கொண்டு மொழி பெயர்ப்பதைவிட, ஆங்கிலப் பேச்சு ஒன்றே மகாநாட்டைச் சிறப்பித்து