பக்கம்:எனது நண்பர்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்  124

புகுத்தியவர் அன்பர் அண்ணாத்துரையே ஆவர். இம் முறையானது மரபுக்கு மாறுபட்டது எனக் கூறினாலும், செவிச் சுவைக்கு வேறுபட்டது எனக் கடறிவிட முடியாது.

அவர் பேசும்பொழுது தன் குதிகாலை உயர்த்தி, உயர்த்திப் பேசுவது வழக்கம். பேச்சில் நகைச்சுவையும், வீரச் சுவையும் மாறி மாறிக் காட்சியளிக்கும். அடுக்குச் சொற்கள் அதிகமாக வந்து விழும். குறுகிய உருவமும், குறும்புப் பார்வையும், புருவ நெரிப்பும், இனிய குரலும், எடுப்பான ஒசையும், வெற்றிலை அடக்கிய வாயும்; வீராவேசப் பேச்சும், பற்றில்லாதவரையும் பற்றுக் கொள்ளச் செய்யும் பான்மையுடையனவாகும்.

சுருக்கமாகக் கடறவேண்டுமானால் தமிழ்நாட்டில் உயர்ந்த பேச்சாளர்களின் கூட்டத்தில் முதல் வரிசையில் விரல் விட்டு எண்ணக்கட்டிய சிலரில் அன்பர் அண்ணாத்துரையும் ஒருவர் என்றே கூறியாக வேண்டும்.

கலைஞர்

அன்பர் அண்ணாத்துரை பேச்சாளர் மட்டுமல்ல, எழுத்தாளருங்கூட. அவருடைய “திராவிட நாடு” பத்திரிகை தமிழ்நாட்டில் அதிகமாக வரவேற்கப்படுகிறது. அவர் பத்திரிகை ஆசிரியர் மட்டுமல்ல; நாடக நூல் ஆசிரியருங்கூட. அவரால் எழுதப் பெற்ற “வேலைக்காரியும்”, “ஓர் இரவும்” நாடகத்தின் மூலமும் திரைப்படத்தின் மூலமும், மக்களுக்குச் சீர்திருத்த உணர்ச்சியை உண்டாக்கி இருக்கின்றன. இவர் ஒரு பேச்சுப் புலவர் மட்டுமல்ல; நடிப்புப் புலவருங்கூட “சந்திரோதயம்” நாடகத்தில் அவர் உணர்ச்சியோடு நடிப்பது கண்ணுக்கு மட்டுமல்ல, சிந்தனைக்கும் சிறந்த விருந்தாக இருந்தது. ஆகவே, அன்பர் அண்ணாத்துரை அவர்கள் எழுத்து, பேச்சு, நடிப்பு ஆகிய முத்துறையிலும் சிறந்த கலைஞராக இருந்து வருகிறார்.

குற்றச் சாட்டுக்கள் .

1.“மூவர் சேர்ந்து ஒப்பந்தமாகக் கையெழுத்திட்டு அறிக்கை விட்டு வெளியேறிய பிறகு அண்ணாத்-