பக்கம்:எனது நண்பர்கள்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
122  எனது நண்பர்கள்
 
திராவிடக் கழகம்

திராவிடநாடு பிரிவினைப் பற்றிப் பேச்சுப் பிரசாரம் மட்டுமே நடைபெற்று வந்தது. அதன் பேரால் ஒரு கழகம் இருக்க வேண்டும் என்று எண்ணம், முதன் முதலாக அன்பர் அண்ணாத்துரைக்கே ஏற்பட்டது. அதன்படி காஞ்சிபுரத்திலேயே முதலில் திராவிடர் கழகத்தைத் தொடங்க எண்ணி முயற்சி செய்துவந்தார். பிறகு சேலம் நிர்வாகக் கூட்டத்தில் “தென்னித்திய நல உரிமைச் சங்கத்தையே திராவிடர் கழகம்” என மாற்ற வேண்டும்’ என்று தீர்மானம் செய்யப் பெற்றுத் திராவிடர் கழகத் தலைமை நிலையத்தின் உரிமையானது காஞ்சீபுரத்திலிருந்து ஈரோட்டிற்குச் சென்று விட்டது என்றாலும், அன்பர் அண்ணாதுரை அவர்கள் இதை வெளிக்குக் காட்டிக் கொள்ளவில்லை. இச்செய்தியைச் சிலரே அறிவர்.

பெரும பங்கு

தமிழ் நாட்டில் படிப்பில்லாத மக்களிற் பெரும்பான்மையோரைப் பேச்சின் மூலம் தட்டியெழுப்பிய பெருமையில் பெரும்பங்கு பெரியார் ஈ.வே.ரா அவர்களுக்கு உண்டு. அது போலவே, படித்த இளைஞர்களிற் பெரும்பான்மையோரைப் பேச்சின் மூலம் தட்டியெழுப்பிய பெருமையில் பெரும் பங்கு அன்பர் அண்ணாதுரைக்கு உண்டு என உறுதியாகக் கூறலாம்.

பேச்சாளர்

அன்பர் அண்ணாத்துரை ஆங்கிலத்திலும், தமிழிலும் நன்றாகப் பேசும் ஆற்றல் படைத்தவர். மேடை ஏறிப் பேசுகின்றவர்கள் பலராலும் பாராட்டப்படுபவர். இக்காலத்திய மேடைப் பேச்சுக்களில் பயனிலையை முன்னே வைத்துச் செயப்படு பொருளைப் பின்னே வைத்துப் பேசப்படுகிறது. அது “தூது அனுப்பினார், பதில் வந்தது” என்றிராமல், “அனுப்பினார் தூது, வந்தது பதில்” என்றிருக்கும். இம்முறையை நம்நாட்டில் முதலிற்-