பக்கம்:எனது நண்பர்கள்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
130  எனது நண்பர்கள்
 

முடியாது” என்று கூறுவது நானல்ல, அது தலைவர் செல்வநாயம் அவர்களது வாய்மொழி. 1952ல் நடந்த தேர்தலில் வடமாகாணத்திலிருந்து தமிழரசுக் கட்சியின் ஒரே உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அன்பர் வன்னியசிங்கம் அவர்களே. சில காலம் தமிழரசுக் கட்சி யின் பொதுச் செயலாளராக இருந்து பணியாற்றிய அவர், கட்சியின் தனலவராக 1953 ஆம் ஆண்டு தொடங்கி 1958ஆம் ஆண்டுவரை இருந்ததாக என் நினைவு. சிங்களறு போராட்டத்தில் அவர் ஆற்றிய தொண்டும் மறக்க முடியாததாகும்.

சரித்திரப் பிரசித்தி பெற்ற மாவிட்டபுரத்தின் மேற்குப் பகுதியான கொல்லங்கலட்டியில், நல்ல முறையில் நல்வாழ்வு வாழ்ந்து வந்த பெரும் வழக்கறிஞர் குடும்பத்திற் பிறந்த அவர், பொது வாழ்வில் புகுந்து பிறர் வாழ்வுக்காகத் தொண்டு செய்து இரு முறை சிறை வாழ்வும் வாழ்ந்திருக்கிறார்.

1959ஆம் ஆண்டில் இடைக்காடு என்னுமிடத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் நாங்கள் இருவரும் பங்குபெற்றோம். மேடையில் பேசிய பேச்சின் அளவு சிறிது; அதற்கு முன்பும் பின்பும் நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த பேச்சுக்கள் பெரிய அளவில் இருந்தன. அந்த உரையாடல் அவருக்குள்ள இலக்கிய அறிவை எனக்கு நன்கு விளக்கியது. இவரது கேள்விகளனைத்தும் குறளைப் பற்றியே இருந்ததுடன்,அவரது திருக்குறள் ஆராய்ச்சியையும் நன்கு விளக்கியது. அவரது அன்பும் பண்பும் எங்களது நட்பை மேலும் வளர்ததன.

யாழ்ப்பாண நகரிலிருந்து நான்கு மைல் தொலைவிலுள்ள உரும்பிராய் ஊரிலுள்ள வணிகரான திரு நடேசலிங்கம் எனது நீண்ட நாள் நண்பர். அவர் தமது இல்லத்தில் ஒரு நாள் எனக்கும் திரு வன்னியசிங்கம் அவர்களுக்கும் ஒருமித்து விருந்தளித்தார். அன்று திரு வன்னிய