பக்கம்:எனது நண்பர்கள்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.கி. ஆ. பெ. விசுவநாதம்  29
 

நான் அவரருகில் சென்று அவரது கையை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு,

"ஐயா! நாட்டுக்கு என்ன சொல்லுகிறீர்கள்?

மொழிக்கு என்ன சொல்லுகிறீர்கள்?

மக்களுக்கு என்ன சொல்லுகிறீர்கள்?"

என்று கேட்டேன்.


அதையே அவர் மிகவும் ஓசை குறைந்த சொற்களால் திரும்பக் குறிப்பிட்டு

“நாடு இருக்கிறது......மொழி இருக்கிறது...... மக்கள் இருக்கிறார்கள்... நீங்களும் இருக்கிறீர்கள். பார்த்துக்கொள்ளுங்கள்’’

என்று கூறினார்கள். நாங்கள் கண் கலங்கினோம்.

‘இப்போது இவ்வாறு சொல்ல யார் இருக்கிறார்கள்?’ என்று எண்ணும் பொழுது, உள்ளம் வேதனையையே அடைகிறது. என் செய்வது? செய்வது ஒன்றுமில்லையென்றாலும், வாய் திறந்து வாழ்த்தவாவது செய்யலாம் அல்லவா!

வாழட்டும் திரு.வி.க. புகழ்!

வளரட்டும் திரு.வி.க. மரபு!