பக்கம்:எனது நண்பர்கள்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56  எனது நண்பர்கள்

பேருதவி புரிந்த தமிழவேள் அவர்களின் துணிவு என்னால் என்றும் மறக்கமுடியாதது. ‘காதல் என்றால் என்ன?’ என்பதை நான் புரிந்துகொண்ட அக்காலத்திலேயே தமிழ்க்காதல் என்று ஒன்று உண்டு; அது தலை சிறந்தது என்பதைப் புரிந்து கொண்டதும் அவரிடத்தில் தான்.

பெருமை என்பது பெருந்தன்மையே எனவும், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் எனவும் கூறிய வள்ளுவர் வாக்கிற்கிணங்க நடந்து காட்டி மறைந்த பேரறிஞர் தமிழவேள் உமாமகேசுவரர். அப்பெரியாரைப் பாராட்டி, தஞ்சை மக்கள் தமிழ்ச் சங்கத்தின் முன் சிலை எழுப்பி வைத்து வணங்கி நன்றி செலுத்தி வருகின்றனர்.