பக்கம்:எனது நண்பர்கள்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மூன்று தலைவர்கள்

சென்ற இதழ் நாட்டுத் தலைவர் நால்வரைத் தாங்கி வெளிவந்தது. இவ்விதழ் மொழித் தலைவர் மூவரைத் தாங்கி வெளிவருகிறது. ஆம். மொழியின் தலைவர் மூவர் மட்டுமே ஆவர்.

பெயர்

அவர்கள் உயர்திருவாளர்கள் மறைமலை அடிகளார். திரு. வி. கலியாணசுந்தர முதலியார், நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் ஆகிய மூவருமே யாவர்.

குறிப்பு

இம்மூவரையும் முறையே அடிகள் என்றும், திரு. வி. க. என்றும், பாரதியார் என்றும் குறிப்பிடுவது வழக்கம்.

பிறந்த ஊர்

அடிகளுக்கு நாகப்பட்டினமும், திரு. வி. க. வுக்கு திருவாரூரும், பாரதியாருக்கு எட்டையபுரமும் ஆகும்.

வாழ்ந்த ஊர்

அடிகள் பல்லாவரத்தையும், திரு. வி. க. சென்னை இராயப்பேட்டையையும், பாரதியார் மதுரையை யடுத்த