பக்கம்:எனது நண்பர்கள்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கி. ஆ. பெ. விசுவநாதம்  65
 

கின்ற கவிதைகளில் எதுகையும் மோனையுங்கூடத் தேவையில்லை எனக் கருதிகிறார்கள். இக்கருத்து அறிஞர்களால் ஏற்கக் கூடியதன்று. இத்தகையோர் பாரதிதாசன் கவிதைகளைப் பலமுறை படித்தறிவதன் மூலம் சிறந்த கவிதைகளை இயற்றும் ஆற்றலைப்பெற முடியும். இத்தகையோர்களால் நாடும் சிறக்கும்; மொழியும் வளரும்; மக்களும் நல்வாழ்வு வாழ்வர். பாரதிதாசன் பரம்பரையும் வளரும்.

“கோழியும் தன் குஞ்சுகளைக் கொத்தவரும் வான் பருந்தை சூழ்ந்து எதிர்க்க அஞ்சாத தொல் புலி” எனத் தமிழ் மண்ணின் வீரத்திற்கு உவமை கூறிய ஒரே கவிஞர் பாரதிதாசனார்.

இப்பெரும் புலவர் பெருமகனை நினைந்து தமிழக அரசு தான் நடத்தும் “தமிழரசு” இதழைத் தமிழ்ப் புத்தாண்டு இதழாக, தமிழ் வளர்ச்சி இதழாக, புரட்சிச் சிறப்பிதழாக கவிஞர் பாரதிதாசனார் சிறப்பிதழாக வெளியிட அவர் பெயரால் பல்கலை கழகம் அமைக்க முன் வந்திருப்பது கண்டு பெருமகிழ்ச்சியடைகிறேன்.

நாட்டுக்காக, மொழிக்காக, மக்களுக்காக, தமிழ்ப் பண்பாட்டிற்காக, தமிழக அரசினால் வெளிவந்து கொண்டிருக்கின்ற இத் “தமிழரசு” இதழும், தமிழக அரசும் இன்னும் இதுபோன்ற பல நல்ல தொண்டுகளைச் செய்து சிறப்புற்று விளங்க வேண்டுமென, இந்த நல்ல நாளில் முழுமனத்துடன் வாழ்த்துகிறேன்.

எ. ந.—5