பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101


கியாஸ் விளக்கு என் தலையோடு உராய்ந்து கொண்டு இடது தோளில் விழுந்தது. விளக்கின் அடியிலிருந்த கம்பி ஆழ மாக என் தோளில் காயத்தை உண்டாக்கியது; இரத்தம் பீறிட் டது. நான் மூர்ச்சித்து விட்டேன். மேடையில் காற்றில்லாத தால் என்னை வெளியே தூக்கிவந்து கொட்டகையின் பிரதான வாயிலருகே ஒரு கட்டிலில் படுக்க வைத்தார்கள். அன்று நாடகம் பார்க்க வத்திருந்த ஒரு டாக்டர் எனக்குச் சிகிச்சை செய்தார். காயம் விரைவில் ஆறிவிடுமென்றும் பயப்பட வேண்டாமென்றும் என் தந்தைக்கு ஆறுதல் கூறினார்.

நான் மூர்ச்சை தெளிந்தபோது வெளியே கட்டிலில் படுத் திருந்தேன். நாடகம் பார்க்க வந்த ஜனங்களில் பலர் என்னைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள் நாடகம் நடந்து கொண் டிருத்தது. எனக்குப் பதிலாக அட்சயன் வேஷத்தை யாரோ ஒரு நடிகர் போட்டார். படுக்கையில் கிடந்த எனக்கு அவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. நான் எழுந்து பார்த்தால் மேடை நன்றாகத் தெரியும். ஆனால் தந்தையார் என்னை எழுந்திருக்க விடவில்லை. நாடகம் முடியும் வரை அப்படியே படுத்திருந்தேன்.

வீட்டுக்கு வந்ததும் அன்னையார் எனக்குத் ‘திருஷ்டி’ சுற்றிப் போட்டார்கள். மயிலம் முருகப் பெருமான வேண்டிக் கொண்டார்கள். காயம் ஆறுவதற்கு ஒரு வாரம் ஆயிற்று. அம்மாவோடும் அப்பாவோடும் அருகிலிருந்த மயிலத்திற்குச் சென்று முருகப் பெருமானைத் தரிசித்து வந்தோம்.

வண்டிப் பாளையம்

திண்டிவனத்தில் இரண்டு மாத காலம் நாடகம் ஆடிய பின் திருப்பாதிரிப்புலியூருக்கு அருகிலுள்ள வண்டிபாளையம் சென்றாேம். வண்டிப்பாளையத்தில் நல்ல வசூல் இல்லை. திருப்பா திரிப்புலியூரிலேயே நாடகம் நடிக்க முதலாளிகள் முடிவு செய் தார்கள். அவ்வாறே உடனடியாகத் திருப்பாதிரிப்புலியூரில் நாடகம் துவக்கப்பட்டது. நல்ல வருவாயும் ஏற்பட்டது. அங்கு வீடு கிடைக்காததால் நாங்கள் வண்டிப்பாளையத்திலேயே இருப்தோம். நாடகத்திற்குப் போய் விட்டு, குதிரை வண்டியில்