பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280


வேற்றார். குடியரசுப் பதிப்பகம், பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் சார்பில் தாம் வெளியிட்ட நூல்களையெல்லாம் கொண்டுவரச் சொன்னார். சிறிதும் அயர்வுருது, அத்தனை நூல் களிலும் கையெழுத்திட்டுக் கொடுத்தார். அன்றுமுதல் பெரியார் ஜீவா, பட்டுக்கோட்டை அழகிரிசாமி உள்ளிட்ட சுயமரியாதை இயக்கத் தோழர்களுடன் எங்களுக்கு நெருங்கிய நட்புறவு ஏற்பட்டது.

கடவுட் கொள்கையில்எங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன. என்றாலும் சுயமரியாதை இயக்கத்தின் சாதி ஒழிப்பு, குழந்தை மணத்தடை, கலப்புமணம், கைம்மை மணம் முதலிய சமுதாயச் சீர்திருத்தக் கொள்கைள் என்னைமட்டுமல்ல, எங்கள் குழுவினார் அனைவரையும் கவர்ந்தன. தோழர் ஜீவாவின் சமதர்ம உணர்வும், அது பற்றிய அவரது பாடல்களும் சொற்பொழிவு களும் எனக்கு ஒரு உறுதியான லட்சியத்தை வகுத்துத் தந்தன வென்றே சொல்ல வேண்டும். எனக்கு அரசியலறிவு ஊட்டிய அறிஞர்களில் முதலாவதாகக் குறிப்பிடத் தக்கவர் தோழர் ஜீவானந்தம் அவர்களே ஆவார்.

நாங்கள் நடத்தி வந்த சமுதாயச் சீர்திருத்த நாடகங்களைப் பெரியார் அடிக்கடி வந்து பார்த்தார்.அந்த நாடகங்கள் அவரை மிகவும் கவர்ந்தன. எங்கள் மீது பற்றுக் கொள்ளச் செய்தன. எங்கள் குழுவினார் அனைவருக்கும் ஒரு நாள் பெரியார் இல்லத்தில் விருந்து நடந்தது. அப்போது பெரியார் அவர்களின் துணைவியார் காகம்மையார் உயிருடன் இருந்தார்கள். அவர்கள் எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்தார்கள். பெரியார் அவர்கள் எங்கள் நாடகக் கம்பெனிக்கு விருந்து வைத்ததைக் கண்டு ஊரே வியந் தது. எப்போதும் சிக்கனத்தைக் கையாளும் பெரியார் அவர்கள் ஒரு நாடகக் கம்பெனியாரிடம் இவ்வளவு தாராளமாகப் பழகியதும் விருந்து வைத்ததும் வியப்புக்குரிய செய்தியல்லவா!

பம்பாய் மெயில்

ஈரோட்டில் சதாவதானம் தே. பொ. கிருஷ்ணசாமி பாவலர் அவர்கள் எழுதிய பம்பாய் மெயில் நாடகம் தயாராயிற்று. அதற்கு