பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

373


மாமனும் இருந்தார்கள். பெண்ணின் உடன் பிறந்தவர்களான ஒரு சகோதரனும் இரு சகோதரிகளும் என்னை வரவேற்றார்கள். பெண்ணின் தங்கை சரஸ்வதி ஒரு தூண் அருகில் நின்று கொண்டு புன்னகையோடு என்னை கும்பிட்டாள். அவளுடைய அழகிய தோற்றத்தையும் வசீகரத்தோடு என்னை வணங்கி நின்ற பாங்கினேயும் பார்த்து நான் முதலில் இவள்தான் பெண் என்று நினைத்துக் கொண்டேன். என்னுடன் வந்த நண்பர் இவள் பெண்ணின் தங்கை சரஸ்வதி. பெண் இன்னும் சிவப்பாகவும் அழகாகவும் இருப்பாள்” என்று காதில் ஒதினார். உடனே பெண்ணின் தங்கை சரசு “அக்கா உள்ளே இருக்கிறாள். வெளியே வரக் கூச்சப்படுகிறாள். நீங்கள் உள்ளே போய்ப் பார்க்கலாம்” என்றாள். அவளை எனக்கு நிரம்பவும் பிடித்தது. நான் உடனே “உன்னைப் பார்த்ததே போதும். அக்கா உன்னை விடஅழகு என்று நண்பர்சொல்லுகிறார். உள்ளேபோய் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை” என்று சொல்லிவிட்டு எழுந்தேன். உடனே அவள் பதற்றத்தோடு, “இருங்கள், காப்பி சாப்பிட்டு விட்டுப் போகலாம்” என்று உள்ளே ஓடினள். உள்ளிருந்து சிரிப்பொலிகேட்டது. அருகில் இருந்த என் நண்பர் “பெண்தான் சிரிக்கிறாள்” என்று மெதுவாகச் சொன்னார். நானும் சிரித்தேன், சிற்றுண்டி பரிமாறப் பட்டது. விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டோம். மறுநாள் மதுரை வந்து சேர்ந்தேன். பெண்ணின் தமையனும் பெரியண்ணாவுடன் பேசுவதற்காக என்னோடு மதுரைக்கு வந்தார்.

திருமணம் நடந்தது

16-ஆம்தேதியன்று திருமணம் உறுதிசெய்ப்பட்டது. பிறகு ஏற்பாடுகள் விரைவாக நடந்தன. 20ஆம் தேதி காலை சேலம் செவ்வாய்பேட்டையிலுள்ள பெண்வீட்டில் நிச்சயதார்த்தம் நடை பெற்றது. பெரியண்ணா, சின்னண்ணா தம்பதிகள், தங்கைகாமாட்சி அண்ணா திரவியம்பிள்ளை முதலியோர் இதில் கலந்து கொண்டார்கள். அவர்கள் சேலத்திலிருந்து திரும்பியதும் கம்பெனி மானேஜர் திரு ஆர். கே. மூர்த்தி என்னிடம் வந்து தமிழ்த் திருமணம் நடத்த எல்லோரும் இசைந்துவிட்டதாகக்கூறினார். ஆனால் உண்மையில் நான் எண்ணியபடி நடைபெறவில்லை. திருமணத்திற்கு இரண்டு நாட்களின் முன்பே புரோகித முறைப்படி தான்