பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

443


திரு ஏ. கார்மேகக் கோன் (மதுரைத் தமிழ்ச் சங்கம்)

“ சி. ஆர். மயிலேறு எம். ஏ. (அண்ணாமலைப் பல்கலைக் கழகம்)

“ சி. என். அண்ணாதுரை எம். ஏ.

“ கி. ஆ. பெ. விசுவநாதம்

பேராசிரியர் வ. ரா. (சென்னை)

கான்சாகிப் ஜனப் கே. ஏ. ஷேக்தாவுத் சாகிப்

காரியதரிசி: டி. கே. ஷண்முகம்

பொக்கிஷதார்: டி. கே. பகவதி

3. இக்கழகத்தின் போஷகர்களாகக் கீழ்க்கண்ட பெரியார்களை இம்மாநாடு தேர்ந்தெடுக்கிறது.

4. 1. ராஜா சர். மு. அண்ணாமலைச் செட்டியார் அவர்கள்

2. சர். ஆர். கே. சண்முகம் செட்டியார் “
3. இராமநாதபுரம் சேதுபதி மன்னார் “
4. வள்ளல் அழகப்பச் செட்டியார் “

ஈரோடு

11 – 2– 44

இத் தீர்மானம் மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேறி யிருக்குமானல் அதன்படி செயலாற்ற என்னைப் பொறுத்த வரையில் சித்தமாக இருந்தேன். இதற்குப் பெரியண்ணாவின் அனுமதியையும் பெற்றிருந்தேன். ஆனால் அன்று எங்களுக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்த பெரியவர்கள், எங்களைப் புரிந்து கொள்ளாமல் செயலாற்றியதால் அந்த அருமையான வாய்ப்பினைத் தமிழகம் இழந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

இரண்டாவதாக மகாநாட்டுத் தலைவரை மறுநாள் காலை ரயில் நிலையத்திலிருந்து அவர் தங்குமிடமாகிய கான்சாகிப் இல்லம் வரை மேளதாளத்தோடு ஊர்வலமாக அழைத்துவர ஏற். பாடு செய்யப்பட்டிருந்தது. இதுபற்றி ஆர். கே. சண்முகம் அவர்களே ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதற்கிணங்க ஊர்வலம் எதுவும் தேவையில்லையென்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஊர்வலத்தில் கறுப்புக் கொடி பிடிக்கத் திட்டமிட்டிருந்த