பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

453


னவோ மகாநாடுகள் நடக்கின்றன. ஏன் நாங்கள் மட்டும் ஒரு மகாநாடு நடத்தக் கூடாது?”

“நாடகமும் சினிமாவும் ஒன்றுதான். ஒன்று உண்மை யுருவம், மற்றொன்று நிழல். இதில் எதுவும் சாகவில்லை. சாகப் போவதும் இல்லை. இன்றிருக்கும் நிலையிலிருந்து நாடகக் கலை வளர வேண்டுமானால் நடிகர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நல்ல வாழ்க்கை வசதி வேண்டும், தன் வாழ்க்கை முழுதும் நாடகத் தொழிலில் உழைத்துவிட்டு, கடைசியில் வயிற்றுச் சோற்றுக்கு வாடும்படியான நிலையில் நடிகர்கள் இருப்பார்களானல் நாடகக் கலை அபிவிருத்தி அடைய முடியாது.”

கலைவாணர் இவ்வாறு சிரிக்கச் சிரிக்கப் பேசினார். ஆனால் சிந்தனைக்கு வேலை கொடுப்பதாகவும் அந்தப் பேச்சு அமைந்தது. அடுத்து இன்றைய நாடகம் என்னும் தலைப்பில் ஸ்ரீ ராம பால கான சபா வைரம் அருணாசலம் செட்டியார் அவர்கள் சார்பில் திரு ஏ. ஆர். அருணாச்சலம் பேசினார். அவரைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா அவர்கள் ஒலிப்பெருக்கியின் முன்னே வந்து நின்றார். அவருக்குக் கொடுத்திருந்த தலைப்பு கலையின் நிலைமை என்பது. அவையில் முழு அமைதி நிலவியது. அண்ணா பேசத் தொடங்கினார்.

“நாடக அபிமானிகளும், நாடகக் கலையிலே ஈடுபட்டுள்ள தோழர்களும் இசைவாணர்களும் கலாரசிகர்களும் நிரம்பியுள்ள இந்த மகாநாட்டிலே எனக்கும் பேச ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது பற்றி மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நாடகக் கலையின் முன்னேற் றத்திற்காக இந்த மகாநாடு நடைபெறுகிறது. காலையிலே தலைவர் சர் சண்முகம் அவர்கள் சொற்பெருக்காற்றினார். வேறு பல அன்பர்களும் பேசினார். இயலே வளர்க்கவும் இசையை வளர்க்கவும் அமைப்புகள் இருக்கின்றன. நாடகக் கலை வளர்ச் சிக்கான அமைப்பும் முயர்ச்சியும் இல்லை. எனவே எனது தோழர் சிவதானு இதற்கான ஒரு தனி மாநாட்டை முதன்முறையாகக் கூட்டியதுபற்றி நான் அவரைப் பாராட்டுகிறேன்.”

“நாடகக் கலை முன்னேற்றத்திற்குப் பல காரியங்கள் நடை பெற வேண்டியிருக்கின்றன. முதலிலே ஊருக்குத் தியேட்டர் வசதி வேண்டும். இப்போது எல்லாம் சினிமாக் கொட்டகைகள்