பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

472


தனாலே இவாள்ளாம் மனுஷா மாதிரி நடமாடறா!” என்று மாமனார் சூலமங்கலம் பாகவதரை எப்போதும் உயர்த்தியே பேசுவார். மாமனரிடம் இந்த அளவுக்கு அன்பும் மரியாதையும் காட்டும் ஒரு மருகியை நான் இதுவரை கண்டதில்லை. பாகவதர் குடும்பம் நாடகத்திற்கு வந்து விட்டால் ஆயிரம் ரசிகர்கள் வந்தது போல, எங்களுக்கெல்லாம் ஒரே குதுரகலமாயிருக்கும்.

அக்குடும்பத்தாரின் ஒவ்வொரு செயலிலும் கலையம்சம் நிறைந்திருக்கும். குலமங்கலம் பாகவதர் அவர்களுடைய ஒவ்வொரு பேச்சிலும் நகைச்சுவை ததும்பி நிற்கும். அனுபவப் பேருண்மைகளை அனாயசமாகக் கொட்டுவார். இத்தகைய புலமையும் அன்பும் நிறைந்த பெரியவர் 1943-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி இறைவன் திருவடியில் அமைதி பெற்றதை அறிந்தபோது நாங்கள் அனைவரும் பெரும் துக்கத்தில் ஆழ்ந்தோம். அவருடைய திருப்பெயரால் குலமங்கலத்தில் ஒரு சங்கீதமகால் நிறுவ அப்போது நிதி சேகரித்துக் கொண்டிருந்தார் கள். அந்த நிதிக்கு நாங்களும் ஒருநாள் நாடக வசூலை காணிக்கையாக அளித்தோம்.

22வது நாள் நடந்த சிவ லீலாவுக்கு குமரராஜா முத்தையா செட்டியார் அவர்கள் வந்திருந்தார். மூன்று பெரிய வெள்ளிக் கோப்பைகளைப் பரிசாக வழங்கிப் பாராட்டினார். மொத்தம் 37 நாட்கள் சிவலீலா நடைபெற்றது. 37 வது சிவலீலா நாடகம் சூலமங்கலம் பாகவதர் நிதிக்காக நடத்தப் பெற்றது. அன்று ஆயிரம் ரூபாய்களுக்கு மேல் வசூலாயிற்று. அந்தத் தொகையை அப்படியே டாக்டர் மீனாட்சி சுந்தரத்திடம் கொடுத்தோம். 1937-இல் ஐம்பதும் நூறும் வசூலான காரைக்குடியில் இப்போது ஆயிரக்கணக்கில் வசூலாயிற்று.

தனி வீட்டில் குடியிருந்தேன்

கம்பெனிக்கு ஒரு பெரிய வீடும், அதற்கு ஒரு பர்லாங் துரத்தில் திரெளபதி தம்பதிகள், அக்கா மற்றும் பெண்களுக்காக ஒரு வீடும் பார்த்துக் குடியிருந்தார்கள். ஒத்திகை முதலியவை பார்ப்பதற்கு வசதியாக நானும் எனக்குத் துணையாக எங்கள் குழுவின் நீண்ட காலப் பணியாளர் அனந்தன் நாயரும்