பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

500

திற்குப் ப. நீ. யும் வந்திருந்தார். அறுவை இகிச்சையில் கிடைத்த ஒய்வு நாட்களைப் புதிய நாடகம் எழுதப் பயன் படுத்திக் கொண்டோம்.

இருவரும் நீண்டநேரம் விவாதித்து முள்ளில் ரோஜா என்று நாடகத்திற்குப் பெயர் வைத்தோம். நண்பர் ப. நீலகண்டன் விரைவாக எழுதுவார். எழுத்துக்கள் பிழையில்லாமல் தெளிவாக இருக்கும். “நான் எழுதியிருப்பது தங்களுக்குப் பிடிக்கவில்லே யென்றால் கூச்சப்படாமல் சொல்லுங்கள் வேறு எழுதுகிறேன்” என்று முன்கூட்டியே சொல்வி விடுவார்.

சிறந்த ரசிகர் அவர். தான்படிக்கும்போது என்முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பார். என் உள்ளத்தின் ரசனையை முகத்தைப் பார்த்தே புரிந்து கொள்வார். சரி, பிடிக்கவில்லை போலிருக்கிறது. சொல்வதற்குக் கூச்சப்படுகிறீர்கள். வேறு எழுதிவிடுகிறேன்” என்று சொல்வி உடனே தாம் எழுதிய காகிதத்தைக் கிழித்து போட்டு விடுவார்.

முள்ளில் ரோஜாவில் ஒரு உணர்ச்சிக்கரமானகாட்சி. ராம நாதனை அவனுடைய தோழர்கள் தாசி விட்டுக்கு அனுப்புகிறார்கள். அவன் அனுபவமில்லாதவன். அப்பாவி. தாசி செல்லத்தின் படுக்கையறைக்குள் நுழைகிறான். உள்ளே வந்து மிரள மிரள விழிக்கிறான். கைகள் நடுங்குகின்றன. செல்வத்தைப் பார்க்கிறான். கிரிக்கமுயல்கிறான். உண்மையான சிரிப்பு வரவில்லை. அசடு வழிகிறது. செல்லம் “எங்கே வந்நீர்கள்?” என்று கேட்கிறாள். ராமநாதன் திகைக்கிறான். இந்தக் காட்சியில் செல்லம் அவனுக்கு அறிவுரை கூறும் முறையில் ஆத்திரத்தோடும் ஆவேசத்தோடும் பேசுகிறாள். ‘அந்தப் பேச்சு இயல்பாக இருக்க வேண்டும். எழுச்சியோடு அமையவேண்டும். வார்த்தைகள்தங்கு தடையில்லாமல் வரவேண்டும். புரியாத வார்த்தைகளைப் போட்டுக் குழப்பாமல் எளிமையாகப் பேச வேண்டும். ஆனால் கொச்சை நடையாக இருக்கக் கூடாது’ என்றெல்லாம் சொல்லி விட்டு எழுதுங்கள் என்றேன். எழுதினார். முழுதும் எழுதிவிட்டுப் படித்தார், நான் முகத்தை சுளித்தேன். உடனே கிழித்துப் போட்டார். மீண்டும் எழுதினார். ஏறத்தாழப் பத்துமுறையாவது அந்த ஆவேசப் பேச்சை எழுதியிருப்பாரென நினைக்கிறேன்.