பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

501


கடைசியாக எழுதி முடித்த பேச்சு அற்புதமாக அமைத்தது. அதைப் பலமுறை சொல்விச்சொல்லி நானே ரசித்தேன்.

முள்ளில் ரோஜா பாடம் கொடுக்கப்பட்டது. எங்கள் கம்பெனியின் கவினார் க. ஆ. ஆறுமுகனார் முள்ளில் ரோஜாவுக்கு அருமையான பாடல்களை இயற்றித்தந்தார். மகாகவி பாரதியாரின் ‘மோகத்தைக் கொன்றுவிடு,’ அன்பென்று கொட்டு முரசே,’ புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின், ‘பெண்களால் முன்னேறக்கூடும்,” “அண்ணி வந்தார்கள் எங்கள் அண்ணாவுக்காக” ஆகிய பாடல்களையும் பொருத்தமான இடங்களில் சேர்த்துக் கொண்டோம். இந்தப் பாடல்கள் நான்கும் நாடகத்திற்காகவே எழுதப் பெற்ற பாடல்களைப்போல் சிறப்பாக அமைந்தன.

முள்ளில் ரோஜாவின் கதாநாயகன் இராமனாதன் பாத்திரமும் எஸ். எஸ். இராஜேந்திரனுக்கே கொடுக்கப் பெற்றது. அந்த நாடகத்திலும் நான் ஒய்வெடுத்துக் கொண்டேன். ஒய்வு என்றால் வேடம் புனைவதிலிருந்து ஒய்வு பெற்றேனே தவிர நாடகத்தின் பொறுப்பு முழுவதையும் நான்தான் ஏற்றுக் கொண்டிருந்தேன்.

22. 12-42-இல் முள்ளில் ரோஜா நாடகம் அரங்கேறியது.

நாடகம் என்மனத்திற்கு முழுநிறைவினைத் தந்தது. பொது மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள். எல்லா நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்தார்கள். அன்றைய நாடக வசூல் 1070.60. இத் தொகையை ஒரு தாம்பாளத்தில் வைத்து நாடகாசிரியர் ப. நீல கண்டன் அவர்களின் நாடகத் திறமையைப் பாராட்டி, அவர் மேலும் தொடர்ந்து பல நாடகங்களைத் தமிழுக்கு அளிக்க வேண்டுமென்று வாழ்த்தி அவரிடம் கொடுத்தேன்.

அந்தமான் கைதி ஒரு துன்பியல் நாடகமாக அமைந்தது. அதேபோல முள்ளில் ரோஜாவையும் துன்ப நாடகமாகவே முடித்திருந்தோம். அந்தமான் கைதியில் நடராஜன் அந்தமான் கைதியாக இருக்கும் நிலையில், தன் தங்கையும் அவள் காதலனும் மறுமணம் புரிந்து கொண்டு மகிழ்வோடு வாழ்வார்கள் என்பதை