பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

529


என்ற உறுதி எனக் கேற்பட்டது. நாடகம் முடிந்ததும் உள்ளே சென்று சீதாராமனைப் பாராட்டி உற்சாகப் படுத்தினேன்.

ஔவை ஆசிரியருக்குக் காணிக்கை

ஒளவை நாடகத்தின் உரிமையை திரு. பி. எதிராஜூ அவர் களிடம் நாங்கள் பெற்றபோது அவருக்கு ஒரு சிறு தொகை தான் அன்பளிப்பாகக் கொடுக்க முடிந்தது. எனவே ஆயிரக் கணக்கில் வசூலாகும் கோவையில் அவருக்குக் காணிக்கையாக. ஒரு நாடகம் நடத்திக் கொடுக்க விரும்பினோம். 30.11-47 இல் நடைபெற்ற ஒளவையார் நாடகவசூல் ரூ.1619.8.0ஆசிரியருக்குக் காணிக்கையாகக் கொடுக்கப் பெற்றது. ஒளவையார் முழுவதை யும் பார்த்து, நாடகத்தின் தமிழ்ச்சுவையை நன்முக ரசித்து, நாடகத்தின் மங்களப் பாடலும் தமிழ் மொழி வாழ்த்தாக இருக்க வேண்டுமென்று விமர்சனம் வரைந்த தலைவர் சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களின் திருக்கையாலேயே இந்தக்காணிக்கையை ஒளவை ஆசிரியருக்கு அளிக்கச்செய்தோம். ஆம்; அன்று சிலம்புச்செல்வர்தான் தலைமை தாங்கி வாழ்த்தினார்.

சிலம்புச் செல்வரோடு மேலும் தொடர்பு

1946இல் கோவையில் இருந்த போது, திரு ம. பொ. சி. அவர்கள் நடத்தி வந்த திங்கள் இதழைத் தொடர்ந்து படித்து வந்தேன். 1946 ஆகஸ்டு இதழில் “கண்ணகிக்குக் கோயில் உண்டா?” என்னும் தலைப்பில் சிலம்புச்செல்வர் எழுதியிருந்த சிறிய கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தது. ஒரு பெரிய ஆராய்ச்சிக்குத் தோற்றுவாயாக அக்கட்டுரை அமைந்திருந்தது. தமிழ்ப் பேராசிரியர்கள் பலரும் செய்யாத ஒரு சிறந்த ஆராய்ச்சிக்கு வித்திட்டது போன்றிருந்தது அக்கட்டுரை. அவரது கட்டுரையினை பாராட்டி ஒரு கடிதம் எழுதினேன். இக்கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு மேலும் நன்கு. ஆராய்ந்து ஒரு நூல் எழுதுமாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து கடிதங்கள் மூலமே எங்கள் உறவு வளர்ந்தது.

1947 நவம்பரில் நடைபெற்ற தமிழரசுக்கழக மாநாட்டிற்கு 100 ரூபாய்கள் நன்கொடை அனுப்பினேன். அதன் காரணமாக நட்புறவு மேலும் வளர்ந்தது. நவம்பர் முன்றாவது வாரத்தின்