பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

555


தன்னைத் தாழ்வாக எண்ணியெண்ணியே தமிழன் தன்னிகலயழித் தான் என்பது என் உறுதியான கருத்து. தாழ்வு மனப்பான்மை நம்மைவிட்டு ஒழிந்தால்தான் நாம் உலகின்முன் எல்லாத் துறை. களிலும் தலை நிமிர்ந்து நிற்க முடியுமென்ற உறுதி எனக்குண்டு.

பெயரே பெருமையைப் பேசியது

நண்பர் ரா. வே. ‘தமிழன் பெருமை’ என்ற ஒருநாடகத்தை. தன்னுடன் கொண்டு வந்திருந்தார். ‘இதை நடிக்கிறீர்களா?’ என்று கேட்டார். நாடகப் பரிசு வைத்து அப்போதுதான் சில நாடகங்களை வாங்கி வைத்திருந்தோம். “இதை நடிப்பதற்கு இயலாது; சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தை நாடக உருவில் எழுதுங்கள். நன்றாயிருந்தால் நடிக்கிறோம்” என்று கூறினேன். ஆவலோடு ஒப்புக்கொண்டார். முதல்முறை கோவையில் காட்சிக் குறிப்புக்கள் காண்பித்தார். திண்டுக்கல் முகாமில் நாடகம் கொடுத்தார். இமயத்தில் நாம் என்ற நாடகத்தின் பெயரைப் படித்தேன். என் தோள்கள் விம்மின. ரா. வே. அவர்களின் பெருமித உணர்ச்சி அந்தப் பெயரிலேயே பேசியது.

கோவையில் நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்தோம்: கவி. ஆறுமுகனார் அவர்கள் பாடல்களை எழுதினார், பாடல்களுக்கு. பண் அமைக்கும் பொறுப்பினை எம். கே. ஆத்மநாதன் ஏற்றுத் தமது பொறுப்பினைச் செம்மையாகச் செய்தார். தம்பி பகவதி செங்குட்டுவளுகவும், நான் இளங்கோவாகவும் பாத்திரங்களே ஏற்றோம். நிமித்திகன் பாத்திரம் குண்டு கருப்பையாவுக்குக் கொடுக்கப்பட்டது. செங்குட்டுவனின் துணைவி வேண்மாளாக எம். கருப்பையா நடித்தார். பொற்றொடி என்று புதிய கற்பனைப் பாத்திரமொன்றைப் படைத்திருந்தார் ரா. வே. அந்தப் பாத்தி ரத்தை எம். எஸ். திரெளபதி ஏற்றார். பி. எஸ் வேங்கடாசலம் சீத்தலைச் சாத்தனராகவும், கே. கோவிந்தசாமி கல் சுமக்கும். கனகவிஜயனாகவும் பாத்திரமேற்று நாடகத்திற்குப் பெருமை சேர்த்தார்கள். ஒத்திகை பார்த்தபோதே நாடகம் பிரமாதமாக இருக்குமெனத் தோன்றியது.

வில்-புலி-கயல் சின்னம்

திரு. விஸ்வேஸ்வரன் என்ற மின்சார நிபுணர் ஒருவர் எங்களுக்குக் கிடைத்தார். அவருடைய யோசனைப்படி பிரமாண்ட்