பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இமயத்தில் நாம்

வீரமும் காதலும் விரவிக் கிடக்கும் தமிழர்களின் வரலாற்று நாடகங்களை மேடைக்குக் கொண்டுவர வேண்டு மென்பது எங்கள் நீண்ட நாள் ஆசை. அதிலும் சிறப்பாக வட ஆரியர் முடித்தலை மேல் இமயக்கல் கொணர்ந்து பத்தினி கண்ணகிக்குப் படிவம் சமைத்த சேராமாவீரன் செங்குட்டுவனின் செயற்கரும் செயலை நாடகமாக்கி நடிக்க வேண்டுமென்பதில் எங்களுக்கிருந்த ஆர்வம் சொல்வி முடியாது.

ரா. வேங்கடாசலம் அறிமுகம்

செங்குட்டுவனை நாடகமாக எழுதுங்கள் என்று எங்களோடு தொடர்பு கொண்ட எழுத்தாளர்கள் பலரிடமும் கூறினேன். இரண்டொருவர் எழுதுவதாகக் கூறினார்கள். சிலர் காட்சிக் குறிப்புக்கள் வரைவதோடு நிறுத்திக் கொண்டார்கள். திரு ரா. வேங்கடாசலம் அவர்களே திருச்சி வானெலி நிலைய எழுத்தாள நண்பர்கள் கே. பி. கணபதி, ரா. ஆறுமுகம் இருவரும் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். பத்திரிகைகளில் வெளிவந்தசிறு கதைகளின் வாயிலாக ரா. வே. அவர்களின் கதை புனேயும் ஆற்றலே நான் அறிந்திருந்தேன். அவரை நேரில் சந்தித்துச் சிறிது நேரம் பழகியதும் செங்குட்டுவனே எழுதுவதற்கு அவர் மிகவும் தகுதி வாய்ந்தவர் என்பது எனக்குப் புலப்பட்டது, அவரே ஒரு செங்குட்டுவனாகத் தோன்றினார்.

தமிழ், தமிழ்நாடு, தமிழ்இனம், தமிழ் எழுத்தாளர் என்றால் அதற்கிணை உலகில் எங்குமில்லையென்ற உணர்ச்சிராவே இதயத்தோடு ஒட்டிக் கிடந்தது. தன்னைப் பற்றி, தன் எழுத்துக்களைப் பற்றி சிறிதும் குறைத்து எண்ணும் மனோபாவம் அவரிடமில்லை.