பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55


அபிமன்யுசுந்தரி இரு நாடகங்களிலும் இவர் சுபத்திரையாகத் தோன்றுவார். 1921- இல்சென்னையில் நடித்துக் கொண்டிருந்த சமயம் சிங்காரவேலு ‘ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’ க்குப் போய் விட்டார். அங்கு, பல ஆண்டுகள் நடித்துப் புகழ் பெற்றார்.

நல்ல பாடகர் நல்லகண்ணு

திரு நல்லகண்ணு திருநெல்வேலியில் பிறந்தவர். பின் சாவித்திரியாகவும், பின் சுலோசனையாகவும் நடிப்பார். இனிமையான குரல்; அருமையாகப் பாடுவார். சோகமாக நடிக்க வேண்டிய பாகங்களில் இவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கும். சதியனுசூயாவில் நருமதையாகவும், பவளக்கொடியில் பவளக் கொடியாகவும் தோன்றுவார். இவர் 1922-இல் கம்பெனி பூவிருந்தவல்லியில் இருந்தபோது விலகிக்கொண்டார். வேறு சில நாடக சபைகளில் இருந்த பின்பு, திருநெல்வேலியில் தையற் கடை வைத்துக் கொண்டிருந்தபோது நான் இவரைச் சந்திக்க நேர்ந்தது.

எமன் கந்தசாமி

எமனக நின்று என்னைப் பயமுறுத்திய திரு கந்தசாமியை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இவர் தான் என் நினைவில் இன்னும் பசுமையாக இருப்பவர், இரணியன் கடோற்கஜன் முதலிய இராட்சதவேடங்கள் இவரது தனி உரிமை இவரும் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். இவர் 1922-இல் கம்பெனியிலிருந்து விலகினார். பிறகு வேறு துறைகளில் ஈடுபட்ட தாகக் கேள்வி.

பயூன் ராமசாமி

கம்பெனியின் ஒரே நகைச்சுவை நடிகராகத்தனியரசு புரிந்தவர் திரு ராமசாமி. எல்லா நாடகங்களிலும் இவர் நகைச்சுவைப் பாத்திரங்களை ஏற்று நடிப்பார். அந்த நாளில் அவசிய மென்று கருதப்பட்ட ‘பபூன்’ ஆகவும் அடிக்கடி வந்து பாடிப் போவார். அவருக்கென்றே சுவாமிகள் சில புதிய நகைச்சுவைப் பாடல்களை இயற்றினார். இவர் ஆஞ்சநேயராக நடிப்பதற் கென்றே ‘இலங்காதகனம்’, நாடகமும் தயாரிக்கப் பெற்றது.