பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

கம்பெனி பூவிருந்தவல்லியில் இருந்த பொழுது இவரும் விலகிக் கொண்டார். நாங்கள் தூத்துக்குடிக்குப் போகும் போதெல்லாம் இவரைச் சந்திப்பதுண்டு.

சின்னண்ணா டி.கே. முத்துசாமி

சின்னண்ணா திரு. டி. கே. முத்துசாமி கம்பெனியின் ஆரம்ப காலத்தில் சிறு சிறு வேடங்கள்தாம் புனைந்து வந்தார். சுலோசன சதியில் சின்னண்ணா ராமராகவும், நான் லட்சுமணனுக வும் நடிப்போம். சீமந்தனியிலே அவர் சுமேதாவாக நடிப்பார். நான் சாமவானக நடிப்பேன். மற்ற நாடகங்களில் எல்லாம் சின்னண்ணாவுக்குப் பெரும்பாலும் தோழி வேடந்தான். 1921இல் சென்னைக்கு வந்தபிறகுதான் அவர் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கினார். சின்னண்ணாவுக்கு ஆரம்பத்தில் நன்றாகப் பாட வராது. அந்தக் குறையைப் போக்க அவர் அரும்பாடு பட்டுச் சங்கீதம் கற்றுக் கொண்டார். பின்னல் அவர் நன்முகப் பாடவும், ஆர்மோனியம் வாசிக்கவும், ஆசிரியராக இருந்து, மற்றவர்களேத் தயாரிக்கவுமாகத் தம்மை வளர்த்துக் கொண்டார். 1935-இல் நாங்கள் சகோதரர்கள் நால்வரும் நடித்த மேனகா பேசும் படத் திற்குச் சின்னண்ணா சங்கீத டைரக்டராகவும் இருந்தார் என்பதை இங்கே மகிழ்வோடு குறிப்பிட விரும்புகிறேன்.

சாத்துளரிலும் சிவகாசியிலும் நாடகங்கள் நடித்துவிட்டு மீண்டும் மதுரைக்கு வந்து சேர்ந்தோம். புதிய நாடகங்கள் சில தயாரிக்கப் பெற்றன. புதிய நடிகர்களும் சிலர் கம்பெனியில் சேர்ந்தார்கள். மதுரையில் மீண்டும் ஒரு மாத காலம் நடித்து விட்டுச் சிவகங்கைக்குப் பயணமானோம்.

பாட்டி முத்தம்மாள்

சிவகாசி வரையில் நாங்கள் கம்பெனி வீட்டிலேயே வசித்து வந்தோம். தாயார் மதுரையிலே இருந்தார்கள். அவர்களைப் பிரிந்திருப்பது எனக்கு வேதனையாகத்தான் இருந்தது. தந்தை யாரைப் பெற்ற தாயார் திருமதி முத்தம்மாள் அன்னையாருக்குத் துணையாக இருந்தார்கள். 1920-இல் எங்களுக்கு ஒரு தங்கை பிறந்தாள். சுப்பம்மாள் என்று அவருக்குப் பெயர் சூட்டப்