பக்கம்:எனது பூங்கா.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. என் அதிர்ஷ்டம்



இங்கிலாந்து காட்டில் சுமார் நானுாறு ஆண்டுகட்கு முன்னர் எலிசபெத் என்னும் பெயருடைய அரசி ஆட்சி புரிந்து கொண்டிருந்தார். அவர் ஒருநாள் தேம்ஸ் நதியில் அலங்காரம் செய்து நின்றுகொண்டிருந்த அழகான ஓடத்தில் போய் ஏற வேண்டியிருந்தது. அதற்காக அவர் தமது அரண்மனைப் பூங்கா வழியாக மந்திரிகள் பிரதானிகள் புடைசூழ நடந்து போனார். அவர் சென்ற வழியில் ஒரு இடத்தில் சிறிது சேறு காணப்பட்டது. அதில் கால் வைக்க அவர் தயங்கியபோது அவருடன் சென்று கொண்டிருந்த பிரபுக்களில் ஒருவர் ராலே என்பவர் அந்தக் கணமே தாம் அணிந்து கொண்டிருந்த வெல்வெட் அங்கியைக் கழற்றி அரசி கடந்துசெல்வதற்காகச் சேற்றின் மீது விரித்தார். அரசி மிகுந்த மகிழ்ச்சியுடன் அதன்மீது கடந்து சென்றார் என்று சொல்லுவார்கள்.

ஆனால் நான் அரசன் அல்லன். ஆயினும் எலிசபெத் அரசிக்கு வாய்த்தது எனக்கும் வாய்த்தது என்று கூறினால் வாசகர்கள் ஐயுறுவார்கள். ஆனால் உண்மையைத்தான் உரைக்கிறேன். அரசிக்கு ராலே பிரபு வெல்வெட் விரித்தார். எனக்கு இரண்டு அழகிகள் பட்டும் சரிகையும் விரித்




—109–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/111&oldid=1392285" இலிருந்து மீள்விக்கப்பட்டது