பக்கம்:எனது பூங்கா.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்கள் விரும்புவது எது? தான். எந்தப் பலசாலியும் அவருக்கு இணையாக மாட்டான் அவரை வென்றவர் இதுவரை யாருமிலர். அதனல் அவ ருடைய வாளும் ஜயசீலி என்னும் பெயர் பெற்றிருந்தது. அவருடைய சிங்கநாதம் முழங்கியதும் கோட்டை வாசல் திறந்தது. ஆல்ை, திறந்ததுதான் தாமதம். இதென்ன ஆச்சரியம் ஜயசீலி தரையில் வீழ்ந்து விட்டது. அரசருக்கு ஓர் அடிக்கூட எடுத்து வைக்க இயலவில்லை. அசைவற்ற மரம்போல் கின்ருர் கோட்டைக் குள்ளிருந்து அந்த முரடன் வந்தான். ஆர்தர் அரசரே ரோ ? வாரும் என்னுடன் சண்டை செய்ய விரும்புகிறீரா, நல்லது, புறப் படும். என் கோட்டைச் சிறைக்குள் உம் வீரர்களில் பலர் கிடக்கின்றனர். அவர்களுடன் சேர வாரும் ! என்று பரிகாசமாகப் பேச ஆரம்பித்தான். ஆர்தர் நெஞ்சில் கோபம் பொங்கி எழுந்தது. ஆனல் அவரால் என்ன செய்ய முடியும்? அவர் பலமெல்லாம் எவ் விதமாகவோ மாயமாக மறைந்து போய்விட்டதே. கை யைக் கூடத் துாக்க முடியவில்லையே. யாதொன்றும் பேசா மல் தலையைத் தொங்க விட்டுக் கொண்டு வெட்கி நின்ருர். சரி, உம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனல் நீர் அரசர் ஆயிற்றே அதனுல் ஒன்று கூறுகிறேன் ; கேளும். இன்னும் ஒரு வருஷ காலத்திற்குள் 'பெண்கள் விரும்பு வது எது?” என்னும் கேள்விக்கு விடை தெரிந்து வந்து கூறுவீராயின் இப்பொழுது உமக்கு உயிர்ப் பிச்சை தருகி றேன். என்ன சொல்கிறீர்?' என்று அந்த அரக்கன் முழங்கின்ை. —118–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/120&oldid=759313" இலிருந்து மீள்விக்கப்பட்டது