பக்கம்:எனது பூங்கா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எனது கார்

டிருக்க நாற்காலிகள், சாய்வு நாற்காலிகள் போட்ட ஹால், மேஜை முதலியன உள்ள போஜனசாலை, உறங்குவதற்குக் கட்டில்களிட்ட இடம், சமையல் அறை, ஸ்நான அறை முதலியன எல்லாம் அமைக்கப்பெற்ற பெரிய மோட்டார் கள் தயாரிப்பதாகக் கேள்வி. ஆனால், அதைக்கேட்டு அற்புதம் அற்புதம் என்று ஆச்சரியப்படத் தேவையில்லை. என் காரோடு ஒப்பிட்டால் அவைகள் எல்லாம் காற்றில் மிதக்கும் தூசியினும் சிறியவை.

 என் காரின் நீளம் இருபத்தையாயிரம் மைல், அகல மும் அதே அளவுதான். இவ்வளவு பெரிய காரைப்பற்றிக் காணவேண்டாம், கேட்கவேண்டாம், என்றேனும் கன வாவது கண்டிருக்கிறீர்களா? நீளத்தின் அளவே அகலம் என்று கூறியதால் சதுரம் என்று எண்ணிவிடவேண்டாம். என் கார் எல்லா அம்சங்களிலும் அபூர்வமானதாயிருக்க வேண்டாமோ? மனிதர்கள் செய்யும் கார்களில் சில மீன் உருவம், சில படகு உருவம், சில வேறு உருவம் கொண் டிருக்கும். என்னுடைய கார் ஆரஞ்சுப்பழத்தின் உருவம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 சாதாரணமாகக் கார்கள் நாள் செல்லச்செல்ல அழகு குன்றும், தேய்வுறும், கெட்டுவிடும். திரைகள் கிழிந்து போகும், விரிப்புக்கள் நிறம் மங்கும், கண்ணாடிகள் கீறி விடும், விசை வேலைசெய்யாது, கதவுகள் 'கிரீச்' என்று பாடத்தொடங்கும். ஆனால் எனது கார் விஷயமோ அப் டியன்று. வருஷங்கள் செல்லச்செல்ல வனப்பு மிகுந்து வருகின்றது. கார் செய்யப்பட்ட காலத்தில் காணப்பட்ட அற்புதங்கள் வேறு, இப்பொழுது காணப்படும் அற்புதங் கள் வேறு. எப்பொழுதும் அற்புதம்தான்.

—17—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/16&oldid=1299019" இலிருந்து மீள்விக்கப்பட்டது