பக்கம்:எனது பூங்கா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எனது கார்

அது கறங்குபோல் மேலும் கீழுமாய்ச் சுழன்றுகொண்டே செல்லும். அப்படிச் சுழல்வதும் மணிக்கு ஆயிரம் மைல் வீதமாகும். அப்படிச் சுழன்றாலும் அதிலுள்ள மனிதர் களும் சாமான்களும் கீழே விழுந்துவிடுவதில்லை. எதுவானா லும் சரி, வாகனத்திலிருந்து தவறிவிட்டால் உடனே வாக னம் அதைத் தன் இடத்தே இழுத்துக்கொள்ளும் சக்தி வாய்ந்தது. வாகனத்தை விட்டு எதுவும் சிதறி மறைந்து விடமுடியாது.

 வாகனம் ஆரஞ்சுப்பழம்போல் உருண்டை வடிவாய் இருப்பதால், வாகனத்தைவிட்டு விலகிநின்று கவனித்தால், அதில் உள்ளவர்களில் சிலர் அதில் நிற்பது போலவும், சிலர் அதிலிருந்து தொங்குவது போலவும் காணலாம்; ஆனால் அவர்கள் அனைவரும் நிற்பதாகவே உறுதி கூறுவர். தொங்குவதாக எவரும் ஒப்புக்கொள்ளமாட்டார்.
 இந்த வாகனத்தில் பகலில்தான் வெளிச்சம் உண்டு. இது எல்லாக் கார்களிலும் உள்ளதுதானே என்று கேட் பீர்கள். ஆம், உண்மைதான். ஆனால் மற்றக் கார்களில் பகலில் வெளியில் பார்த்தால் வெளியிலுள்ள பொருள்கள் கண்ணுக்குப் புலனாகுமன்றோ? என் வாகனத்தில் அப்படி இராது. பகலில் வாகனத்தின் உள்ளேயுள்ள பொருள்கள் கள்தான் தெரியும். வெளியே பார்த்தால் ஒன்றும் புலப் படாது. இரவிலோ என்றால் வெளியில் மிக அற்புதமான காட்சிகள் எல்லாம் விளங்கும். வானவெளியில் சந்திரன் போன்ற மின்மினிகள் சிலவேளைகளில் மட்டும் ஏற்றி வைக்கப்படும்; அப்பொழுதுமட்டும் மங்கலான ஒளி வீசும்.
 இதுபோன்ற விமானம் வேறில்லை என்றேன். ஆனால் வேறுவிதமான, ஆயினும் இதுபோல் மிக வேகமாக ஓடக்

—20—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/19&oldid=1299047" இலிருந்து மீள்விக்கப்பட்டது