பக்கம்:எனது பூங்கா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித தரிசனம் என்பதும் அவர் கன்ருக அறிந்த உண்மையாகும். அத ல்ை தான் அறிவையோ ஆற்றலையோ செல்வத்தையோ மனிதனுடைய சிறப்புக்குக் காரணமாகக் கூருமல், மற்ற வர்களுக்காக உழைப்பதையே மக்கட் பண்பாகக் கூறினர். மனித இனத்தை மனிதர்கள்தான் மடியாமல் காக்க முடியும். அப்படி யிருக்க மற்றவர்கட்காக உழைப்பவரே மனித இனத்தைக் காப்பவர் என்று இம்மன்னர் கூறுவ தால் மற்றவர்க்காக உழைப்பவரே மனிதர் என்பது புலன கின்றது. இதையே உலகத்தில் அவதரித்த உத்தமர்கள் எல்லோரும் உரைக்கின்றனர். ஆனல் அறிஞர்கள் கூறுகிருர்களே என்பதற்காக அதை நம்புவோம் என்று நாம் எண்ண வேண்டியதில்லை. நம்முடைய அனுபவத்தின் மூலமாகவும் அவர்களின் கூற்று உண்மைதான் என்று நாம் அறிந்து கொள்ள முடியும். இரண்டு நாள் பட்டினியாக உள்ள ஒரு தாயையும் அவள் குழந்தையையும் ஒரு பக்கம் கிறுத்துவோம்; இரண்டு நாள் பட்டினியாக உள்ள ஒரு பசுவையும் அதன் கன்றையும் மறுபக்கம் நிறுத்துவோம். ஒரு பிடி அன்னத்தைத் தாயின் முன்பும், ஒரு கற்றைப் புல்லேப் பசுவின் முன்பும் வைப் போம். அப்பொழுது என்ன கடக்கிறது என்று பார்ப் போம். பசுவானது தன் கன்றே ஆலுைம் கன்றை முட் டித் துரத்தி விட்டுப் புல்லேத் தானே தின்றுவிடும். ஆல்ை தாயோ தன் வயிற்றை இறுக்கப் பிடித்துக் கொண்டு அன் னத்தைக் குழந்தைக்கே ஊட்டி மகிழ்வாள். இதிலிருந்து மற்றவர் கலத்தை நாடுவதே மக்கட் பண்பு என்பது தெளி வாகும். புல்லேத்தின்ன வொட்டாமல் கன்றைப் பசு துரத் —46—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/46&oldid=759375" இலிருந்து மீள்விக்கப்பட்டது