பக்கம்:எனது பூங்கா.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தி கற்பித்த கலை வியங்களேக் கற்ருலும் அவற்றைப் பிரசங்கம் புரியவும் கட்டுரை எழுதவும் தர்க்கம் செய்யவுமே பயன்படுத்துகின் ருேம். ஆல்ை இலக்கியங்களை இவ்விதமாக மட்டுமே உபயோகிப்பவர்கள் இலக்கியத்தால் அடையவேண்டிய பயனே அடைந்தவராகார் என்று ஆர்னல்ட் பென்னட் என்னும் பெரு நாவலாசிரியர் த மது "இலக்கியச் கவை' என்னும் எழில் மிகுந்த சிறு நாலில் கூறுகின்ருர். இலக்கியத்தைப் பயனுறப் படித்தவன் என்பதற்கு இரண்டு அடையாளங்கள் கூறுகின்ருர். ஒன்று அழுக் காறு கோபம் முதலியன எழாவண்ணம் மனத்தை அடக்கு வது. ஆம், அதை எண்ணியேதான் நம்முடைய தாயுமான வரும், ' கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள், கற்றுமறிவில்லாத என் கர்மத்தை என் சொல்கேன், மதியை என் சொல்லுகேன், வெல்லாமல் எவரையும் மருட்டிவிடவகை வந்தவித்தை என்முத்தி தருமோ,” என்று வருந்துகிரு.ர். ஆர் ல்ைட் பென்னட் கூறும் இரண்டாவது அடை யாளம் தினசரி வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்களே உடனுக்குடன் .ெ ச ரி வு ப டு த் த க் கூ டி ய இலக் கியப் பகுதிகள் நினைவுக்கு வருவதாகும். ஏதேனும் சொத்து சம்பந்தமாக என் தம்பி என்னுடன் சண்டை யிடுவானல்ை அப்பொழுது, ராமனேக் காட்டுக்குப் போகும் படி தசரதர் சொன்னதாகக் கைகேயி ராமனிடம் சொன்ன பொழுது அவன். 'மன்னவன் பணியன் ருகில், தும்பணி மறுப்பனே, என் பின்னவன் பெற்ற செல்வம் அடிய னேன் பெற்றதன் ருே, ' என்று அவளிடம் சொன்ன -—67’—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/67&oldid=759398" இலிருந்து மீள்விக்கப்பட்டது