பக்கம்:எனது பூங்கா.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- == - - --- காந்தி கற்பித்த கலை

=

மொழிகள் என் நினைவுக்கு வந்து எனக்கு அறிவு புகட்டா திருப்பின் நான் கம்பாாமாயணத்தைக் கரைத்துக் குடி ச்க வன் என்று புகழ் பெற்றிருப்பினும் யாது பயன் ? அதுபோல என்னைவிடச் சகல அம்சங்களிலும் தாழ்க் த வர் யாரேனும் என்னை இகழ்ந்தால் அப்பொழுது கான் உள்ளங்கவர்ந்தெழுங் தோங்கும் சினத்துக்கு ஆளாகாமல், 'சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி துலேயல்லார் கண்ணும் கொளல்" என்னும் அருமைத் திருக்குறள் என் கினேவிற்கு வந்து எனக்கு அமைதி தராதிருப்பின் என் குறள் ஞானம் எதற்கு ஆகும்? i" விஞ்ஞானம் கற்ற எம். ஏ. யின் விஷயமும் இது ோன்றதே. விஞ்ஞான விஷயங்கள் வேணத்தனை கற்றி ருப்பார். அவற்றைப் பயன்படுத்தி விதவிதமான செளகரி யங்கள் உண்டாக்குவதற்கான அறிவையும் படைக் திருப்பார். ஆயினும் அவரிடம் விஞ்ஞான உணர்ச்சி உண்டா யிருக்குமோ என்ருல் அதுதான் சூன்யம். விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியரிடம் விஞ்ஞான உணர்ச்சி உண்டாயிருப்பின், சூரிய கிரகணத்தன்று தர்ப்பைப் புல்லை எடுத்துக்கொண்டு கடற்கரைக்குப் புறப்படுவாரா? i தத்துவ நால் கற்கும் கலாவல்லவரும் இதுபோலவே நடந்துகொள்கிருர், "அவர் கற்றதெல்லாம் தத்துவ சாத் திரப் பிரச்னைகளே ப்பற்றிச் சர்ச்சை செய்வதொன்றே” என்றும் 'ஆளுல் உள்ளத்தை அடக்கியவரே உண்மை யான தத்துவ சாஸ்திர வல்லவர்” என்றும், ஆல்டுஸ் —68–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/68&oldid=759399" இலிருந்து மீள்விக்கப்பட்டது