பக்கம்:எனது பூங்கா.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. மகாத்மாவின் மாண்பு மகாத்மா காந்தியடிகள் மறைந்து விட்டார். அவர் பிரிந்த செய்தி கேட்டு உலக மக்கள் அனைவரும் துயரக் கடலில் ஆழ்ந்து போனர்கள். மக்கள் அனைவரும் ஒருமுக மாக காந்தியடிகளைப் போற்றுவதற்குக் காரணம் யாது? ' உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்தில் எல்லாம் உளன் என்று நமது தமிழ்மறை கூறுகின்றது. வாயாற் பொய் கூருமலும் மெய்யாற் பொய்யான காரியங்களைச் செய்யா மலும் கவனமாக கடந்து கொள்ளலாம். அப்படி கடந்து கொண்டால் மக்கள் கம்மை உண்மையானவர் என்றே எண்ணுவார்கள். இப்படி மொழியாலும், செயலாலும் பொய்யாது ஒழுகினும் உளளத்தில் பொய்யனக இருக்கலா மல்லவா? ஆகவே புறத்தே .ெ -ாய்யாமை நிகழ்ந்தால் மட்டும் போதாது. அகத்திலும் பொய்யாமை நிகழவேண்டு மென்று வற்புறுத்துகிருர் வள்ளுவர். ஆல்ை புறத்து நிகழ்வதைத்தானே நாம் அறியமுடியும் ? அகத்தே நிகழ்வது யாருக்குத் தெரியும் காந்தியடிகள் பொய் கூறவில்லை; பொய்யாக நடக்கவில்லை யென்று தைரி ー了gー

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/73&oldid=759405" இலிருந்து மீள்விக்கப்பட்டது