பக்கம்:எனது பூங்கா.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்குவது எங்கே? --- - யங்களில் கிறிஸ்துவ மதமும் ஒன்று. கிறிஸ்து, மனக் திரும்புங்கள் பாவத்தை விட்டொழியுங்கள், பாவ மன்னிப் புப் பெற்ருல் மட்டுமே பரலோக ராஜ்ய வாழ்வு கிடைக் கும். என்னை நம்புங்கள்' - என்று உலக முழுவதும் பறை சாற்றினர். ஆண்டவன் விரும்பவது ஆசா அனுஷ் டானங்கள் அல்ல, மனத்துக்கண் மாசிலாய் மனிதர்க்கு அன்பு செய்தலேயே என்று அவர் உபதேசஞ் செய்தார். ஆசார அனுஷ்டானங்களில் மூழ்கியிருந்த புரோகிதர்கள் இதைப் பொறுக்காமல் இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்று தீர்த்தனர். ஆனால், உண்மை என்றும் வன்மையுடையது அன்ருே” அதனுல் அவர் இறந்த சில வருவுங்களுக்குள்ளாகவே அவ ருடைய சமயம் வளர்ந்தோங்க ஆரம்பித்தது. நாளடை வில் ஐரோப்பாக் கண்ட முழுவதும் பரவி விட்டது. அப் பொழுது கிறிஸ்துவ மத பிடம் இத்தாலி நாட்டிலுள்ள ரோமாபுரியில் கிறுவப் பெற்றது. மத குருவுக்குப் பெயர் போப். இயேசு இறுதி நேரத்தில் தம் சிள்யர்களில் ஒருவ ராகிய பிட்டரிடம், தெய்வலோகத்தின் திறவுகோலேத் கந்து போனதாகவும், அந்தத் திறவுகோல் போப்பிடம் இருப்பதாகவும் ஐதிகம். ஆதலால், போப்பின் அருளைப் போற்றில்ை, ஆண்டவன் அருளைப் பெற இயலும் என்பது மக்களின் நம்பிக்கை. உலகத்தில் அவரே கடவுளின் பிரதிநிதி. அதனுல் மக்களைப் போலவே அரசர்களும் அவர் ஆணைக்கு அடங்கியே கடந்து வந்தனர். எவ்வளவு பெரிய விர குரர்களாயிருந்தாலும், எந்தச் சக்கரவர்த்தி யுங்கூட அவர் ஆனயிலிருந்து அணுவளவும் பிறழச் சற். அறும் துணிவதில்லை. கிறிஸ்தவ உலகம் முழுவதற்கும் அவரே தலைமை அதிபதி. —82–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/82&oldid=759415" இலிருந்து மீள்விக்கப்பட்டது