பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை ♦ 95

வியந்தோறும் வியப்பைக் கண்டோம்!
      வெண்ணிலா கோடி சேர்ந்தே
நயந்தரும் ஒளிவெள்ளத்தை
      நாளெல்லாம் தெளித்த தைப்போல்
வயப்படும் இயற்கை தந்த
      வனப்பினை எழிலின் எல்லை
நயாகரா அருவி கண்டேன்!

      நாம்வாழ்ந்த பயனைக் கண்டோம்! (12)

பாடல்கள் யாவும் கவிஞரின் கற்பனை கலந்த அநுபவத்தை உணர்த்துகின்றன. இத்துடன் நிற்க,

இரவுக் காட்சிகளைக் கண்டு களித்த நிலையில் இரவு 11.30 மணிக்கு வீடு திரும்பினோம். இல்லத்தை வந்தடைந்தபோது நள்ளிரவு 12.00 மணி.

நயாகரா-பகல் காட்சிகள்: இன்று (1-8-2002) சனிக்கிழமை; டாக்டர் தனஞ்செயன் எங்களுடன் வரவில்லை. நான், என் மனைவி, மகன் டாக்டர் இராமகிருஷ்ணன் மருமகள் விசயலட்சுமி நால்வர் மட்டுமே பகலில் அருவிகளைக் காண முற்பகல் 9.30 மணிக்குப் புறப்பட்டு 10.00 மணிக்கு அருவிகள் இருக்கும் இடத்தை அடைந்தோம் (20 கல் தொலைவு). காருக்கு 5 டாலர் செலுத்தி உரிய இடத்தில் நிறுத்திவிட்டு ஒருவருக்கு 8.50 டாலர் வீதம் செலுத்தி சீட்டுகள் வாங்கிக் கொண்டு அருவிகளை மேல் மட்டத்திலிருந்து காண்கின்றோம் - இனம் தெரியாத உள்ள எழுச்சியில். பெருங்கவின்கோ பாணியில் கூறினால்,

உலகத்தேழ் அதிசயத்தில்
      ஒருபெரும் அதிசயத்தைத்
தலம்புகழ் நயாக ராவை
      தான்பார்க்கும் பேறும் என்னே!
நிலமகள் இவ்வி டத்தில்
      நீரெனும் கைகள் கொண்டு
குலமகள் கொடையாய் வெள்ளம்
      குதித்துவீழ் காட்சி என்னே! (13)

வீழ்ந்திடும் அருவி கீழ்வீழ்
      வேகத்தில் நீர்த் திவலை
தாழ்ந்திடும் வெண்மே கங்கள்

      தான்வந்து புறப்ப டல்போல்