பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை 107

உற்பத்தியாகின்றது. இரண்டு) லுவிஸ்டன்பம்ப் உற்பத்தி அமைப்பு”. இங்கு நுகர்வோர் தேவை உச்ச கட்டத்தை எட்டும்போது மேலும் அதிகமான ஆற்றலை உண்டாக்குகிறது.

நயாகரா அருவிகள்-ஆதி வரலாறு: இந்த அருவிகள் மாபெரும் அகன்ற இராக்கத பனிக்கட்டிப் படலம் பின்னடைவு பெற்று உருகியதால் உண்டானவை. 50,000 ஆண்டுகட்கு முன்னர் பனிக்கட்டி பின்னடைவு பெற்றதால் அதன் பின்புறமாக பூமி தோன்றியது; இது நீண்ட குறுகிய மலைகளாகி உயர்ந்த நயாகரா மலையுச்சிப் பக்கங்களாயின. உருகிய பனிக்கட்டி மிகப் பெரிய ஏரியாயிற்று. அதுதான் இன்று சுற்றுப்புறங்களையும் தாழ்ந்த நிலப்பகுதிகளையும் கொண்ட ஈரிஏரி” என்று வழங்குகின்றது. இந்த ஏரிதான் 12,000 ஆண்டுகட்கு முன்னர் பெருகி வழிந்து நயாகரா அருவிகளை உண்டாக்கின.

இந்த அருவிகள் வடபுறமாக ஏழு மைல் நீண்டனவாக அமைந்தன; அவை தாம் இன்று லூவிஸ்டன் என்ற பெயரால் வழங்கி வருகின்றன. நாளடைவில் தேய்ந்து போனமையால் ஈரி, ஒண்டாரியோ” என்ற இரு ஏரிகளுக்கிடையில் 37 மைல் நீளமான நீர்சந்தி'யாகியது. இது அனைத்துலக எல்லைக் கோட்டால் பிரிக்கப் பெற்றுள்ளது. நயாகரா அருவிகளைக் கொண்ட நியுயார்க் மாநகரும் ஒண்டாரியோ மாநகரும் ஆற்றின் குறுக்கே பாலங்களால் இணைக்கப்பெற்றுள்ளன.

இந்த இயற்கைக் காட்சியை முதன்முதலாக உற்றுநோக்கிக் கண்டவர்கள் செனிகா இந்தியர்களைச் சார்ந்த முன்னோர்கள். அவர்கள்தாம் 2000 ஆண்டுகட்கு முன்னர் இந்தப் பகுதியில் குடியேறியவர்கள். நீண்ட நாட்களுக்குமுன் இந்த அருவிகளை முதன் முதலாக 1678-இல் நோக்கிய ஐரோப்பியர்களில் முதலானவர் ஃபிரெஞ்சு குருமாராகிய அருள்தந்தை லூயிஸ் கென்னெபின்” என்பார். முதன்முதலாகக் கண்ட அருள்தந்தை தரையில் மண்டியிட்டு வழிபாடு செய்து இந்த அருவிகளைப் பற்றி “இந்த அகிலம் இவை போன்றவற்றிற்கு இணையானவற்றை காணப் போவதில்லை” என்று கூறியதாக வரலாறு குறிப்பிடுகின்றது.

சில ஆண்டுகள் அடுத்து இந்த ஆற்றின் நுழைவாயிலில் பல கோட்டைகளைக் கட்டினர் ஃபிரெஞ்சு மக்கள். இவர்கள் கட்டிய நயாகரா பழங்கோட்டை’ அடுத்து 90 ஆண்டுகளாக நடைபெற்ற பெரும்போர்களில் முக்கிய பங்குகள் பெற்றது. 1759இல் நடைபெற்ற ஃபிரெஞ்சு-இந்தியப் போரில்

42. Lewiston Pump - Generating Plant 43. Lake Erie 44. Ontario 45. Strait

46. Father Louis Hennepin 47. Old Fort Niagara