பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளவை

என் அமெரிக்கப் பயணத்தில் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள டாலஸ் பகுதியில் வாழும் என் பேத்தி மிருனாளினி இல்லத்தில் மேமாதம் 14-22 நாட்கள் தங்கி இருந்தோம். அங்கிருந்து பார்த்தனவற்றை ஈண்டுப் பதிவு செய்கின்றேன்.

1. திருக்கோயில்கள்

இங்கு பார்த்த இரண்டும் வடநாட்டுப் பாணியில் அமைந்தவை.

1. ஏக்தா மந்திர்': வடநாட்டுப் பாணியில் அமைந்த திருக்கோயில் ஒன்றிற்கு மே மாதம் 16, வியாழன் முற்பகல் 10.30 மணிக்குப் புறப்பட்டுச் சென்றோம். இத்திருக்கோவில் எங்கள் இல்லத்திலிருந்து சுமார் 15 கல் தொலைவிலிருந்தது. திருக்கோயிலின் அகப்புறச் சூழ்நிலைகள் அற்புதமாக அமைந்திருந்தன. இங்கு விட்டல்-உருக்குமினி, குழலூதும் கண்ணன்இராதை, சிரீநாத், விநாயகர், மகாலட்சுமி, பாலாஜி (திருவேங்கடவன்), முருகன்வள்ளி தெய்வயானையுடன், ஐய்யப்பன், இராமர்-சீதை-இலக்குமணர். அநுமன் இவர்கள் சேர்ந்த நிலை ஆகியவற்றைக் கண்டோம். நல்ல பட்டாடைகளாலும், தங்க ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பெற்றிருந்தன.

முதலில் விநாயகப் பெருமானின் சந்நிதிக்கு வருகின்றோம். அப்பெருமானை, (படம் - 36, 37, 38)

மேன்மைப் படுவாய் மனமே! கேள்

விண்ணின் இடிமுன் விழுந்தாலும், பான்மை தவறி நடுங்காதே;

பயத்தால் ஏதும் பயனில்லை; யான்முன் உரைத்தேன் கோடிமுறை;

இன்னும் கோடி முறைசொல்வேன்; ஆன்மா வான கணபதியின்

அருளுண்டு; அச்சம் இல்லையே

- பாரதியார் வி.நா. மாலை.23 என்ற பாரதியின் வாக்கால் வணங்குகின்றோம்.

1. Ekta Mandir 2. நான் என்மனைவி, அரவிந்தன், என் இரண்டாவது பேத்தி அனுபமா

3. கோயில் திறந்திருக்கும் நேரங்கள். திங்கள் முதல் வெள்ளி வரை. முற்பகல் 9.30 முதல் 12.30 வரை. மாலை 5.30 முதல் 8.30 வரை; சனி, ஞாயிறு காலை 9.30 முதல் இரவு 8.30 வரை.