பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 0 என் அமெரிக்கப் பயணம்

அடுத்து, குழலூதும் கண்ணன் இராதை சந்நிதிக்கு வருகின்றோம். ஆழ்வார்கள்போல் கண்ணன்மீது ஆராக் காதல் கொண்டுள்ளோம். பாரதியார் ‘கண்ணம்மா-என் காதலி பாடல்கள் நினைவிற்கு வருகின்றன.

“நெரித்த திரைக்கடலில் நின்முகம் கண்டேன்;

நீல விசும்பினிடை நின்முகம் கண்டேன் திரித்த நுரையினிடை நின்முகம் கண்டேன்;

சின்னக் குமிழிகளில் நின்முகம் கண்டேன்; பிரித்துப் பிரித்து நிதம் மேகம் அளந்தே

பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை; சிரித்த முகத்திலுன் கைவி லக்கியே

திருமித் தழுவியதில் நின்முகம் கண்டேன்.

- பாரதியார்-கண்ணம்மா என் காதலி. 2

என்ற பாடலை ஓதி உளங்கரைகின்றோம்.

இந்த நிலையில் சிரீநாத் சந்நிதிக்கு வருகின்றோம். இவன் பெயரைக் கண்டதும் சிரீநாதன்-இலக்குமி நாதன்-திருவாழ் மார்பன் என்ற பெயர்கள் எல்லாம் நினைவிற்கு வருகின்றன.

வருவார் செல்வார் வண்பரி

சாரத்து இருந்தஎன் திருவாழ் மார்வற்கு என்திறம்

சொல்லார்; செய்வதுஎன்? உருவார் சக்கரம் சங்குசுமந்(து)

இங்கு உம்மோடு ஒருபாடு உழல்வான் ஓர்அடி யானும் உளன்என்றே?

- திருவாய் 8.3:7

என்ற பாசுரத்தை ஒதி உளங்கரைகின்றோம்.

அடுத்து விட்டல்-உருக்குமினி சந்நிதிக்கு வருகின்றோம். ஏதோ திருமங்கை ஆழ்வார் பாசுரம் ஒன்று நினைவில் எழுகின்றது.

மெளவல் குழலாச்சி மென்தோள் நயந்து மகரஞ் சுழலச் சுழல்நீர் பயந்த தெய்வத் திருமாமலர் மங்கை தங்கு

திருமார் பனைச்சிந்தை யுள்வைத்தும் என்பீர்