பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளவை ♦ 137


நாங்கள் சென்ற அன்று சிறுவர்கள், சிறுமியர்கள் கூட்டம் இரண்டு மூன்று பள்ளிகளிலிருந்து கற்றுலா வந்திருந்தார்கள் போலும். எங்களைப் பல சிறுவர்கள், சிறுமிகள் ‘ஹெல்லோ’ என்று இன்முகத்துடன் வரவேற்கும் பாவனை எங்களை மகிழ்வித்தது. அவர்களே திரும்பும் நிலையில் இல்லம் நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கும்போது எங்களை நோக்கி ‘பை-பை’ என்று கூறி மகிழும் பாவனை எங்களைக் களிப்புக் கடலில் ஆழ்த்தியது. அனைத்தையும் அலைந்து பார்ப்பதற்கு ஆசைதான். ஆனாலும் காலம் இடந்தரவில்லை; கால்களிலும் வலிவு இல்லை ! சக்கர நாற்காலிகளில் சென்றாலும் சில இடங்களில் இறங்கி உள்ளே சென்று பார்க்க வேண்டிய இடங்களும் இருந்தன. ஏதோ பார்த்தவரை மகிழ்ச்சி அடைந்தோம்.

அடுத்து தாழ்ந்த நிலையிலுள்ள ஒரு சிறு தோட்டத்தைப் பார்க்க விழைகின்றோம். அதன் சிறு நுழைவாயில் கண்ணில் படுகின்றது. அத்தோட்டம் ஒரு தனியான இடத்தில் அமைக்கப்பட்டிருந்தது. நுழைவாயிலைக் கடந்து தோட்டத்திற்கு வருகின்றோம். சக்கர நாற்காலிகளை வெளியே நிறுத்திவிட்டுத் தோட்டத்திற்குள் புகுகின்றோம்.

இந்தத் தாழ்ந்த நிலையிலுள்ள தோட்டம் கண்ணுக்கும், கருத்திற்கும் சிறந்த விருந்தாக அமைகின்றது. நாங்கள் தனித்தனியாகப் பிரிந்து சுற்றிப் பார்க்கின்றோம். அங்குள்ள பச்சைப் பட்டு விரித்தாற் போன்ற புல் தரை எவரையும் ஈர்க்கும் தன்மை பெற்றது. அடியேன் தனியே சென்று காட்சிகளைக் கண்டு களிக்கின்றேன். துணைவியாரும் அவர்போக்கில் நோட்டம் விடுகின்றார். சுமார் இருபது மணித்துளிகள் இங்கு கழிகின்றன.

தோட்டத்தை விட்டு வெளியேறி சக்கர நாற்காலிகளில் அமர்ந்தவண்ணம் பல இடங்களைச் சுற்றிப் பார்க்கின்றோம். அடர்த்தியாக மரங்கள் உள்ள இடம். அங்கு ஓரிடத்திற்கு சிறுசிறு அருவிகள் கொட்டுகின்றன. அற்புதமான காட்சிகள். அரவிந்தன் இக்காட்சிகளை ஒளிப்படங்களில் அமைக்கின்றான். (படம் - 49)

அவ்விடத்தைவிட்டு நீங்கி சக்கர நாற்காலிகளில் சுற்றி வரும்போது ஒரு மலர்வனத்திற்கு வர நேரிடுகின்றது. அடர்த்தியான மரத்தோப்பிற்கு முன்பாக இத்தோட்டம் அமைந்திருந்தது. எங்கிருந்தோ பூக்களை வாரிக் கொண்டு வந்து தரையில் கொட்டிய மாதிரி பூக்கள் அடர்த்தியாக நெருங்கிப் பூத்திருந்த காட்சி. என் பேத்தி மீண்டும் அதில் சொக்கி விட்டாள்; உட்கார்ந்து விட்டாள்; எழுந்திருக்க மனம் இல்லை. (படம் - 50

ஒரு வழியாக எழுந்து சுற்றி வரும்போது மீண்டும் தலை கற்றும்படியான அற்புதக் காட்சி. சுற்றுப்புறம் அடர்த்தியான மரங்கள். முன்புறம் கற்றிலும் நெருங்கிய அழகான மலர்ச் சோலைகள். இக்காட்சியை நோக்குபவர்கள்