பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 0 என் அமெரிக்கப் பயணம்

பெண்மணியின் வளையொலி பின்னைப் பிராட்டியின் வளையொலியாகவே கேட்டது.

இந்த மானசீகமான ஆனந்தக் காட்சிக்கு இராமாநுசரின் உள்ளம் திறை கொடுத்தது. அப்பெண்மணியை பின்னைப் பிராட்டியாகவே கருதி தம் பொன்னொத்த மேனி புழுதி படியத் தரையில் வீழ்ந்து தெண்டனிட்டார். இந்நிலையில் அத்துழாய் பரபரப்புடன் ஒடி, தன் தந்தையாரிடம் ஜீயர் என்னைக் கண்டதும் மூர்ச்சித்து விழுந்தார்” என்று தெரிவித்தாள். உடனே உந்துமதகளிறு அது சந்தமாயிருக்கும்” என்றார். பிறகு வாசலுக்கு வந்து எம்பெருமானாரைக் கண்டு “வாரும் ஜீயரே, நானும் இப்பாசுரத்தை ஒதி உணர்ந்திருக்கின்றேன். ஆனால் உம்மைப் போல் அநுபவித்ததே இல்லை” என்று இவர் தம் பக்தியையும் பாசுரத்தில் கொண்டிருந்த ஈடுபாட்டையும் பாராட்டிப் பேசி மகிழ்ந்தார்.

  • * *

நம்பிகள்

ஆண்டாளும் இராமாநுசரும் பெற்ற அநுபவத்தை உளவியலார் ஒட்ட 2 sUTiiSs” (Empathetic feeling) 51 srgy G: gy5Ufi. g)fl(S gy;sru TGIHl, இராமாநுசரும் கோபியருள் ஒருத்தியாகவே ஆய்விடுகின்றனர். இருவருமே கோபியின் உணர்ச்சியைப் பெரிதும் பெற்று அநுபவிக்கின்றனர்.

மேலும் சில நிகழ்ச்சிகள்: அன்பர்களே, இந்த நான்கு நிகழ்ச்சிகளும் வியாக்கியானத்தில் கண்டவையே. மேலும் சிலவற்றைக் காட்டுவேன்.

5. சாந்தியினி வரலாறு: புராணங்களிலும், இதிகாசங்களிலும் காணப் பெறாத ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள்பற்றிய குறிப்புகள்பற்றி ஆழ்வார் பாசுரங்களில் காணப் பெறுகின்றன. அவற்றை உரையாசிரியர்கள் நன்கு விளக்கியுள்ளனர். அத்தகையனவற்றுள் ஒன்று ஈண்டு குறிப்பிடுவது -

மாதவத்தோன் புத்திரன்போய்

மறிகடல்வாய் மாண்டானை ஒதுவித்த தக்கணையா

உருவுருவே கொடுத்தானுரர்

- பெரியாழ். திரு. 4 : 8 1

என்ற பெரியாழ்வார் திருமொழிப் பாசுரத்தில் வருவதாகும்.

கண்ணன் வாழ்ந்த காலத்தில் சாந்தீபினி என்னும் ஒர் அந்தணர் வாழ்ந்தார். அவரிடம் கண்ணன் சகல சாத்திரங்களையும் கற்றான். அக்காலத்தில் கட்டணம் செலுத்தி யாரும் கல்வி கற்பதில்லை. சமூகம் பொருள்களை இலவசமாக வழங்கி ஆசிரியர் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளும். சீடர்கள் ஆசிரியருக்கும், குடும்பத்திற்கும் பல்வேறு பணிவிடைகள் செய்வர்; இலவசமாகக் கல்வி பெறுவர். பல்லாண்டுகள்