பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளவை 163

மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால் ஞாலம் முழுதும் நடந்தளந்தான்; - வாலறிவன் வள்ளுவரும் தன்குறள்வெண் பாவடியால் வையத்தார் உள்ளுவவெல் லாம் அளந்தார் ஒர்ந்து -(6)

என்று பரணர் திருவள்ளுவ மாலையில் வைணவம் வழியாய் வள்ளுவத்தைப் புகழ்ந்தார் அன்று. இன்று வைணவ உரைகளில் கண்ட உளம் உகக்கும் நிகழ்ச்சிகள்’ என்ற தலைப்பில் பேசிநம்மை மகிழ்வித்தார் டாக்டர் ரெட்டியார் அவர்கள். வைணவமும் தமிழும்’, ‘திருக்குறள் தெளிவு’ என்ற நூல்களும் மேலும் 131 நூல்களும் எழுதியுள்ள பேராசிரியர் வைணவ இலக்கியமாமணி’ வைணவ உரைகளில் கண்ட சுவையான நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டி நம்மை மகிழ்வித்தது மிகவும் பொருத்தமாகும்.

‘தமிழர் என்றால் தமிழுக்குத் தொண்டாற்றியவர்; தமிழருக்குத் தொண்டாற்றியவர்; தமிழ் மேல் காதல் கொண்டவர்; தமிழின்பால் அன்பு கொண்டவர் என்று தான் கொள்ள வேண்டும். தாய்மொழி தமிழாய் இருக்க வேண்டியதில்லை. கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட தந்தை பெரியாரும், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவரும் இன்று நம்மிடையே தமிழில் வைணவ இலக்கியத்தைப் பகிர்ந்து கொண்ட யூரீசடகோபன் பொன்னடி பேராசிரியர் சுப்பு ரெட்டியாரும், வீரமாமுனிவரும், வள்ளுவம் மொழி பெயர்த்த ஜி.யு. போப் அவர்களும் தமிழர் தானே. இவர்களில் டாக்டர் ரெட்டியார் இன்றும் தமிழுக்கும், தமிழில் வைணவத்திற்கும், அறிவியலுக்கும் சேவை புரிந்து கொண்டிருக்கின்றார். தொடர்ந்து வாழும் நாள் வரை சேவை புரிய இருக்கின்ற தமிழர் தான் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.

இன்று தமிழகத்தில் தொண்டர்களும், குண்டர்களும் கட்சித் தலைவர்களுக்கும், திரை நடிகர்களுக்கும் தங்களுக்குத் தோன்றிய பட்டங்களைக் கொடுத்து பட்டங்களை அவமானப்படுத்தி வருகிறார்கள். ஆனால் முற்காலத்திலிருந்து தற்காலம் வரை அருங்கலைக்கோன்’, ‘தமிழ்ச் செம்மல், ரீசடகோபன் பொன்னடி’, ‘வைணவ இலக்கிய மாமணி’, ‘ஆய்வுத் தமிழரசு’ டிலிட் (மதிப்பியல்), கலைமாமணி போன்ற பற்பல விருதுகளையும், பட்டங்களையும் தமது அயராத உழைப்பினாலும், தமிழ்-சமயச் சேவையின் மூலமும் சம்பாதித்துள்ளார் இன்றைய நமது சிறப்புச் சொற்பொழிவாளர் அவர்கள். இவர் தமிழர். இவருக்குத் தமிழர் என்ற பட்டமே சாலப் பொருத்தமாகும்”.

12. நன்றி சொன்னவர்: திரு. பால சுவாமிநாதன். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். 13

ஆண்டுகளாக டாலஸ்ஸில் கணிதத் துறையில் பணியாற்றி வருபவர். தமிழைத் தனது மூச்சாகக் கொண்டு பணியாற்றி வருபவர். தொலைபேசி 972-479-6175 (w); 972-479-6543 (Fax)